வட்டியில்லா நகைக்கடன் மோசடி 500 கிலோ தங்கத்துடன் தலைமறைவு

0
Business trichy

வட்டியில்லாமல் நகைக்கடன் வழங்குவதாகக் கூறி 500 கிலோ எடையுள்ள தங்க நகைகளுடன் கடை உரிமையாளர்கள் தலைமறைவானதாகக் கூறப்பட்ட நிலையில், தன்னை திவால் ஆனவர் என்று அறிவிக்கக் கோரி கடை உரிமையாளர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது ரூபி ராயல் ஜூவல்லர்ஸ்.

 

MDMK

தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு மட்டும், இங்கு வட்டியில்லா நகைக்கடன் வழங்கப்பட்டது. ஒரு பவுன் நகைக்கு ரூ.10,000 வழங்கப்பட்ட நிலையில், இந்த கடையில் சுமார் 3,000 பேர் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றனர் என்று சொல்லப்படுகிறது. கடனை முழுவதுமாக அடைத்தபிறகும் சிலருக்கு நகைகள் திருப்பித் தரப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் நகைக் கடை நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது.

ஓராண்டுக்கும் மேலாக இந்த பிரச்சினை நீடித்த நிலையில், சமீபத்தில் நகைக்கடையைப் பூட்டிவிட்டு உரிமையாளர்கள் அனீஸ் மற்றும் சையத் இப்ராகிம் இருவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், நகையை அடமானம் வைத்த சுமார் 1,500 பேர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். மத்திய குற்றப் பிரிவு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.123தற்போது ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான சையத் இப்ராகிம் தன்னை திவால் ஆனவர் என்று அறிவிக்கக் கோரி, இன்று (மே 6) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். தனக்கு 12 கோடி ரூபாய்க்குச் சொத்துகள் இருப்பதாகவும், 11 கோடி ரூபாய்க்குக் கடன் இருப்பதாகவும், தங்கள் கடையில் அடமானம் வைத்தவர்களின் எண்ணிக்கை 309 பேர் எனவும், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகை அடமானம் வைத்ததாகக் கூறி வருகின்றனர் எனவும் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.