யாரை ஏமாற்றுகிறார்கள் தங்க நகை வியாபாரிகள் கதிகலங்க வைக்கும் மர்மப்பின்னணி!

0
1

தங்கம் என்பது நம்முடைய வாழ்வியல் முறையில் பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக, வீடுகளில் பெண் குழந்தை பிறந்து விட்டால் போதும், குழந்தைக்கு நகை சேர்த்து, நல்லமுறையில் கல்யாணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் கூடவே பிறந்து விடுகிறது. அந்த அளவிற்கு கல்யாணம் முதல் சிறு நிகழ்ச்சிகள் வரை தமிழரின் பாரம்பரியத்தில் எந்த இடத்திலும் தங்கம் நீங்காத இடம் பிடித்துள்ளது. பரவலாக இந்தியா முழுவதுமே இந்த நிலையே காணப்படுகிறது. இந்நிலையில் தங்கத்தைப்பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உள்ளதா என்றால் அது சந்தேகமே…!

வளர்ந்து வரும் வணிகயுகத்தில் தொலைக்காட்சியில் எந்த சேனலை வைத்தாலும், என்னெற்ற நகைகடையினர் தொடர்ந்து விளம்பரம் செய்த வண்ணமே உள்ளனர். சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை சதவீதம் என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. ஆனால், உண்மை என்ன ? காண்போம்…

4

ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்…! இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால், 8 கிராம் தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது.
ஆனால், சாமானியன் நகை வாங்கும் போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.
இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டு விடுகின்றார்கள்.

2

ஆக, 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள்! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது? இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன? கணக்கு போட்டு பாருங்கள்.

1 கிராம் தங்கம் ரூ. 2,922, 8 கிராம் தங்கம் ரூ. 23,376,
1 கிராம் செம்பு – 4.80,
1.5 கிராம் செம்பு – 7.20 அல்லது 7,
6.5 கிராம் தங்கம் – 18,993
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை -18993+7=19,000
1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் 23,376-19,000= 4,376
சேதாரம் 1.5 கிராம் = 4,383
1 பவுனுக்கு மொத்த லாபம் 4,376+4,383=8,759
என்ன தலை சுத்துதா ? ஆனால், இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை குறையும். அதுவரையில், நகைக்கடை வியாபாரிகள் தொடர்ந்து நம்மை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.