நம் அருகில் ஒரு சுற்றுலா பயணம் முக்கொம்பு …..

0
Business trichy

நம் அருகில் ஒரு சுற்றுலா பயணம் முக்கொம்பு …..

திருச்சிராப்பள்ளி
முக்கொம்பு அணை…
திருச்சிக்கு மேற்கே 18 கி.மீ தொலைவில், கரூர் நாமக்கல் வழியில் சாலை காவிரி ஆற்றின் நடுவே உள்ளது. இங்கிருந்துதான் காவிரி ஆறானது காவிரி,கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு காவிரியின் வட புறமாகப் பாய்கிறது. காவிரியின் தென்புறம் முக்கொம்பும் வடபுறம் வாத்தலையும் உள்ளன. காவிரியில் வரும் தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரியைக் காட்டிலும் கொள்ளிடம் ஆறுவழியாக அதிக அளவில் வெளியேறி கடலில் கலந்து வந்தது.

இதை முறைப்படுத்தி அதிக அளவு நீரை பாசணத்துக்குப் பயன்படுத்தி முறைப்படுத்த ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து காவிரிப்பாசணப் பகுதி பொறியாளராக 1829இல் பொறுப்பேற்ற சர் ஆர்தர் மணல் மேடுகளால் நீர் போக்கு தடைப்பட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் கட்டுமான உத்தியால் கவரப்பட்ட அவர், கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு, முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 630 மீட்டர் நீளத்தில் 40 அடி அகலத்தில் ஆறு அடி உயர 45 மதகுகள் கொண்ட மேலணையைக் கட்டினார். இந்தப் பணிகள் 1834இல் தொடங்கி 1836இல் முடிக்கப்பட்டது.

 

Kavi furniture
MDMK

அதன் பிறகு 1846இல் அணையின்மீது பால உள்ளிட்டவை கட்டப்பட்டன. இவ்வணையிலிருந்து காவிரியின் தென்புறமாக கால்வாய் வெட்டப்பட்டு பாசண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கடலில் கலப்பது தடுக்கப்பட்டது. மேலும் வெள்ளக் காலத்தில் மட்டும் பெருகி வரும் நீரானது இவ்வணை மூலம் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. இவ்வணைப் பகுதியில் உள்ள பூங்காவும், இவ்வணையும் சுற்றுலா இடங்களாகத் திகழ்கின்றன.

மேட்டூர் அணையில் இருந்து 177 கீலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த மேலணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க இயலும்.
முக்கொம்பு சுற்றுலாத் தலத்துடன்- வண்ணத்துப்பூச்சி பூங்காவை இணைக்கும் வகையிலும், மேலணையின் பேரிடர் கால பயன் பாட்டுக்காகவும் காவிரி நடுக்கரைச் சாலை ரூ.17.35 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 27 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக் கப்பட்டுள்ளது. இங்கு, சுமார் 300 வகையான தாவரங்களும், 100-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களும் உள்ளன. ஆய்வு மையமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் 700 பேரும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 1,200 பேரும் வந்து செல்கின்றனர்.இதேபோல காவிரியும், கொள்ளி டமும் இரண்டாக பிரியும் இடமான முக்கொம்பு மேலணை பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான ரயில், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் காணப்படும் இந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

மூன்று பிரிவுகளா தண்ணீரை பிரித்து அனுப்புவதற்கு முக்கொம்பு எனப் பெயர். மூன்றுப் பிரிவில் ஒன்று 40 மதகுகளைக் கொண்டது காவிரி . இரண்டாவது 45 மதகுகளைக் கொண்ட கொள்ளிடம் ஆறு. மூன்றாவது பாசன வாய்க்கால் (அய்யன் வாய்க்கால், கட்டளை கால்வாய், புள்ளம்பாடி வாய்க்கல் )காவிரி ஆற்றில் அதிக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி வரும் காலங்களில் பாதுகாப்பாக பிரித்தனுப்ப காவிரியில் 80000 கன அடி தண்ணீர் வெளியேற 40 மதகுகளையும், கொள்ளிடம் ஆற்றில் 4 இலட்சம் கன அடி தண்ணீர் வெளியேற 45 மதகுகளையும், பாசன கால்வாய்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த முக்கொம்பு அணை. இதற்கு மேலணை என்றும் பெயர்.இதில் கொள்ளிடம் ஆற்றுப் பிரிவின் 45 மதகுகளில் 9 மதகுகள் உடைந்துள்ளது. இது மக்களிடம் பெரும் சோகத்தை எற்படுத்தியது ..
இங்கு பொழுதுபோக்கு விளையாட்டு தவிர உயிருடம் ஆற்றும் மீன் விற்கப்படுகிறது… மீனை சுத்தம் செய்ய தனியாக ஆட்கள் உள்ளனர் … இது வரை என் வாழ்நாளில் அப்படி ஒரு சுவையான மீனை உண்டது இல்லை… அவ்வளவு அருமையாக .. இருந்தது .. நேரம் கிடைக்கும் போது இங்கு சென்று வாருங்கள் …

– துறையூர் யுவராஜ்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.