திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் அலுவலகம் திடீர் முற்றுகை

0
Business trichy

திருச்சி பெல் நிறுவனத்தின்  பொதுமேலாளர் அலுவலகத்தை திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் பெல் வளாக தொழிலாளர் சங்கத்தினர் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நீண்ட காலமாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.

அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் பெறப்பட்டு, தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மேலும் அந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மற்றும் ‘ஓவர் டைம்’(ஓ.டி) ரத்து செய்ததால், தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

loan point

இப்பிரச்சினை தீர்க்கும்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, நிர்வாகம் தரப் பில் உடனடியாக சரி செய்து தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் இதுவரை மேற்கண்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், திராவிடர் தொழிலாளர் கழக மாநில செயலாளர் மு.சேகர் தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் பெல் நிறுவன முதன்மை நுழைவு வாயிலிலுள்ள பொது மேலாளர் (எச்.ஆர்) சமது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

nammalvar
web designer

இதுகுறித்து இன்று மாலைக்குள் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாக நிர்வாகம் தரப்பில் கூறியதால், தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

இதுதொடர்பாக ஆனால் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் படவில்லை யென்றால், பொது மேலாளர் அவரது வீட்டின் முன்பும், அலுவலகம் முன்பும் தொடர்ச்சியாக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் தெரிவித்தார்.

இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் பெல் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சண்முகம், ராமலிங்கம், காமராஜ், சிங்கராஜ், செந்தில்குமார், மனோகரன், இளந்தமிழன் , கோவிந்தராஜன், பாஸ்கர் உள்ளிட்ட தோழர் கள் கலந்து கொண்டனர்.

 

.

 

 

 

 

 

 

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.