காங்கிரசில் இணைந்த அம்பேத்கர் பேரன்!

0
Full Page

குடியரசு சேனை கட்சியின் தலைவரும், அம்பேத்கரின் பேரனுமான ஆனந்த் ராஜ் அம்பேத்கரும், குடியரசு சேனைக் கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் ராகேஷ் பிரஜபதியும் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா திக்‌ஷித் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Half page

ஆனந்த் ராஜ் அம்பேத்கர், ராகேஷ் பிரஜபதியுடன் அக்கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் ராஜ் அம்பேத்கர், “பாபாசாகேப் அம்பேத்கரின் கனவுகளை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும். காங்கிரஸ் சார்பாக டெல்லியில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களின் வெற்றிக்காக நமது ஆதரவாளர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

முன்னாள் பாஜக எம்.எல்.ஏ பி.டி சர்மாவும், டெல்லி பிரதேச பூர்வாஞ்சல் கானா பரிஷத் கட்சித் தலைவர் நிர்மல் பதக்கும் அவர்களது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கட்சியில் புதிதாக இணைந்தவர்களால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் கரம் மேலும் வலுப்பெறும் என்று ஷீலா திக்‌ஷித் தெரிவித்துள்ளார். கட்சியில் புதிதாக இணைந்துள்ள அனைவரும் காங்கிரஸின் கொள்கைகளையும், திட்டங்களையும், நாட்டின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கொண்டுள்ள திட்டங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.