ராமலிங்கம் கொலையில் திருச்சியை சேர்ந்த நபர் கைது.

0

ராமலிங்கம் கொலையில் திருச்சியை சேர்ந்த நபர் கைது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி அவர் வீடு அமைந்திருக்கும் பகுதியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிலர் மதமாற்றம் குறித்து பேசியதால் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதியில்  சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அதன்பின் அன்று இரவு ராமலிங்கம் தனது மகனுடன் வேலை முடிந்து வருகையில் ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கி கொன்றது. அதன் பின் இக்கொலை பற்றிய செய்திகள் இந்தியா  முழுவதும் பரவியது, பல அரசியல் தலைவர்களும், இந்து முன்னணி சேர்ந்த முக்கிய ஸ்தலரும் இதனைப்பற்றி மேடைகளிலும் பேசப்பட்டனர்.

food

அதன்பின் இவ்வழக்கை கையில் எடுத்த தேசிய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து இவ்வழக்கில் சம்மபந்தப்பட்டோரை விசாரணை செய்து கைது செய்து வருகின்றனர்.

அவ்வகையில் சமீபத்தில் இப்புலனாய்வு பிரிவினர் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால், போன்ற பகுதிகளில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை  சேர்ந்த கட்சி மற்றும் அலுவலகமான எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்றவைகளை ஆய்வு செய்து அங்கு கிடைக்கும் ஆதாரங்களை திரட்டி சென்றனர். அதன்மூலம் திருச்சியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தி கிடைத்த ஆதரங்களைக்கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருச்சி மணப்பாறை அருகே இளங்காகுறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த முகமது பாரூக் (46), என்பவரிடம் கொலை சம்பந்தமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் என்.ஐ. ஏ அதிகாரிகள் கொலை சம்பந்தமான வீடியோ ஆதரங்களும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

அதை தொடர்ந்து முகமது பாருக்கை என்.ஐ. ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்து அவரை பூந்தமல்லி என்.ஐ ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.