திருச்சி அருகே காரில் கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது.

0
Business trichy

திருச்சி அருகே காரில் கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை என்பது பெருமளவு இருந்து வந்தது. பின்னர் தேர்தல் நிறைவடைந்த பின்னும் தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 4 தொகுதிகளான அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளில் தற்போது வேட்பாளர்கள் களத்தில் இறங்கி சக்கப்போடு போட்டுவருகின்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் பாதுகாப்பை நிலைநிறுத்தம் விதத்தில் கூடுதல் வாகன சோதனை அளித்து வருகின்றது.

இந்நிலையில் திருச்சியில் மே 12, அன்று அதிகாலை 3 மணியளவில் சமயபுரம் பள்ளிவிடை அருகே சந்தேகிக்கும்படி தனியாக ஒரு வெள்ளை நிற கார் நின்றுள்ளது. அவ்வழியே இரவு நேர ரோந்து வந்த டி.எஸ்.பி ராஜசேகர் தலைமையிலான குழுவினர், வண்டியை சோதனையிட்டபோது  வண்டியினுள் இரண்டு நபர்களும் பண்டல் பண்டலாக கஞ்சாவையும் கைப்பற்றினர். பின்னர் வாகனத்தை முழுவதுமாக சோதனையிட்டபோது சுமார் 106 பொட்டலங்கள் கொண்ட 212 கிலோ கஞ்சா இருப்பதை உறுதி செய்தனர். அதன்பின் அவ்விருவரையும் போலீசார் விசாரித்தபோது இருவரும் அதில் ஒருவர் பெயர் கவுஸ் (வயது24) என்றும் மற்றோருவரின் பெயர் துர்க்காராவ் (வயது24), என்றும், இவ்விருவரும் ஆந்திரா விஜயவாடா பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

loan point
web designer

இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை எடுத்து செல்வதாகவும், யாரிடம் கொடுப்பது என்பது அவர்களுக்கே தெரியாது என்று போலீசார் விசாரணையில் கூறியுள்ளனர்.

nammalvar

இவர்கள் கஞ்சா கடத்த பயன்படுத்திய வாகனத்தின் எண் Original No : AP.37.K.4290 Toyota என்பதை மாற்றி சோதனையில் மாட்டிக்கொள்ளக்கூடாது என வண்டி எண்ணை TN.64.S.5108 Toyota, என மாற்றி நூதனம்மாக எடுத்து வந்துள்ளனர்.

இதுதொடர்பாக டி.எஸ்.பி அளித்த பேட்டியில் ஆந்திரா நெல்லூர் அருகே இதுப்போன்ற கஞ்சா விற்பனையாளர்கள் அதிக அளவில் காணப்படுவதால் இப்போது புடித்திருக்கும் கஞ்சாக்கள் அங்கேயிருந்து வந்தீருக்குமோ என்று சந்தேகமாக உள்ளது. மேலும் இதுதொடர்பாக முக்கிய குற்றவாளிகளை பிடிக்க இவ்விருவரையும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் என்.ஐ.பி சி.ஐ.டி காசுடடியில் வைத்து விசாரித்து வருகின்றனர் என்றார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.