நோயற்ற வாழ்வு வாழ நாம் இசையோடு ஒன்ற வேண்டும்.

இறைவனுக்கு மிகவும் பிடித்தது இசை. அந்த இறைவனிடம் இருந்து நமக்கு அருள் வேண்டும் என்றால், தினமும் அதிகாலை எழுந்து இறைவனை நினைத்து பாடல் பாடினால் அது கிடைக்கும்.
இசையால் உலகமும் வசமாகும், பஞ்சபூதங்கள் அனைத்துமே இசையில் அடங்கிவிடும். இன்றைய காலத்தில் மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உடையவர்கள் இசையை கேட்டாலே அனைத்தும் படிப்படியாக குறைந்துவிடும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்றால் நாம் இசையோடு ஒன்றி இருக்க வேண்டும்.
அவ்வாறு இசையோடு ஒன்றிகாணப்படுபவர், குளித்தலை சார்ந்த தேன்மொழி இவர் சிறு வயது முதல் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவர், இசையின் மீது அலாதியான அன்பு கொண்டிருந்தார். அதன் காரணமாக பள்ளிகளில் நடக்கும் அனைத்து விதமான போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளை பெற்று வந்தார்.

படித்தால் இசைக் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என முடிவு செய்த இவருக்கு இவரின் சித்தப்பாவின் உதவியினால் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் சேர்த்து, இசையில் இளங்கலை பட்டய படிப்பை நிறைவு செய்தார். பின்னர் பள்ளிகளில் பகுதி நேர இசை ஆசிரியராக பணிபுரிந்தார். மேற்படிப்பு படிப்பதற்காக கொடைக்கானலில் உள்ள மதர் தெரசா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆனது இவரின் இசை ஆர்வத்தை புரிந்து கொண்ட இவரது கணவர் இவரை திருமணத்திற்குப் பின்பும் பல இசை மேடைகளில் பாடல் பாடவும் அனுமதித்தார். அவரது பெற்றோரும் அவரது மாமனார் மாமியாரும் அவருக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தனர். அதன்பின் சென்னையில் இசைத்துறையில் ஆசிரியர் பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார். அதோடு இணைந்து இவர் பரதமும் கற்றுக் கொண்டார்.
அதன் பின்பு இவர் பல இசை மேடைகளில் பல பாடல்கள் பாடியுள்ளார் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற பாடல் போட்டிகளிலும் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிக்காட்டினார்கள் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரின் இசை ஆர்வத்தை புரிந்து கொண்ட இவரது கணவர் இவரை திருமணத்திற்குப் பின்பும் பல இசை மேடைகளில் பாடல் பாட அனுமதித்தார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு குழந்தை பிறக்கவே, குழந்தைகளை கவனித்துக் கொண்டு பல கல்லூரிகளிலும் பல பள்ளிகளிலும் இசை ஆசிரியராகவும் நடன ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தார்.
இதனால் இவருக்கு இசையின் மீது இருந்த காதல் 16 ஆண்டுகளை கடந்து வந்தது, இந்த அனுபவத்தை வைத்து தான் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி தேனுகா நுண்கலை பள்ளி என்னும் பள்ளியினை ஆரம்பித்தார். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை சிறப்பாக இயங்கி வருகிறது தேனுகா நுண்கலைப் பள்ளி.
இந்த பள்ளியில் தற்போது இசை, நடனம், பாட்டு என கர்நாடக சங்கீதத்திலும் மற்றும் மேற்கத்திய இசையையும் கற்றுத்தருகிறார், அது மட்டும் அல்ல யோகா ஓவியம் போன்ற பயிற்சிகளையும் இந்த பள்ளி அளித்து வருகிறது. மேலும், இக்கலைப் பள்ளியின் சிறப்பம்சமாக விஜய் சூப்பர் சிங்கர், ஜீ தமிழ் சரி கம பா, சன் சிங்கர் உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் மூலம் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.
பயிற்சிகளுக்கு பின் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் இவர்கள் குறைந்த கட்டணம் வசூலிப்பதால் இவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான மாணவர்கள் இவரது நிறுவனத்தை தேடி வருகின்றனர். இது மட்டுமல்ல கோவில் விசேஷங்கள் மற்றும் இல்ல சுபநிகழ்ச்சிகளை, மேலும் இனிமே ஆக்கிட கர்நாடக சங்கீதம் மற்றும் மேற்கத்திய இசைக் கச்சேரிகளும் அமைத்துத் தரப்படுகிறது.
மேலும் பள்ளி கல்லூரிகளில் சிறப்பு விழாக்களுக்கு நடன பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான இசைக்கருவிகளும் எங்களிடம் மிக குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். அனைத்து விதமான இசைக்கருவிகளையும் சிறந்த வல்லுனர்களை கொண்டு பழுது நீக்கி தருகின்றனர்.
மேலும் இவருக்கு இந்தப் பள்ளியை வழிநடத்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை பெற்றுள்ளார். தற்போது இப்பள்ளியில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வழங்கி வருகிறார் இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளும் கலந்து கொண்டு வருகின்றனர். பெற்றோர்களே உங்களது குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேருங்கள் அவர்களை சிறந்த கலைஞர்களாக நாங்கள் உருவாக்கித் தருகிறோம்.
