“மருத்துவராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்’’

0
Business trichy

மானிடனாய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் என்ற காலம் மலையேறி, “மருத்துவராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என நம்மை சிலிர்க்க வைக்க செய்யும் மருத்துவர் இன்றும் இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் மருத்துவர்கள் தினம் உற்சாகத்துடன் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ தினத்தில் சிறந்த மருத்துவர்களுக்கான விருது வழங்குவது நம் தமிழ்நாட்டில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி.

மருத்துவதுறையின் அநேக பிரிவுகள் உண்டு. அதில் குழந்தை மருத்துவம் என்பது சற்று சிறப்பு தான். வளர்ந்த மனிதனால் கூட சில நேரங்களில் தனது உடல் பிரச்சினைகளை வாய்விட்டு கூற இயலாத நிலையில் குழந்தையின் தோற்றத்தையும், அதன் அழுகையையும் வைத்தே இதுதான் பிரச்சினை என ஆணித்தனமாக சொல்லும் ஒரு மருத்துவர் தான் நமது திருச்சி அரசு பொது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார்.

Kavi furniture

ஆம், கடந்த ஜூலை மாதம் தலைசிறந்த குழந்தை நல மருத்துவர்கள் 2017-ஆம் ஆண்டிற்கான விருதினை மூவர் பெற்றனர். அதில் திருச்சி அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார் அவர்களும் ஒருவர். தன்னுடன் சேர்ந்து விருது பெற்றவர்கள் டாக்டர்.திரு.செ.குமார் அவர்களுடன் சேர்ந்து இந்த ஆண்டு விருதை தட்டி சென்றவர்கள் மருத்துவர் அனிதா, மருத்துவர் பிரசன்னா லெட்சுமி அவர்கள்.

வளர்ச்சி:

MDMK

1994-ஆம் வருடம் தனது கல்லூரி படிப்பை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தொடங்கினார். மேலும், 2004-ஆம் வருடம் நானும் ஒரு அங்கம் என அரசு மருத்துவராக தனது சேவையை தொடர்ந்தார்.

வாழ்வில் மறக்க இயலாத தருணம்:

“ஒருமுறை கண்டால் அது கனவு.  பலமுறை கண்டால் அது இலட்சியம்” என்னும் வார்த்தைக்கிணைங்க என் இலட்சியத்தை, அதாவது நான் குழந்தை நல மருத்துவராக என் இருக்கையில் அமர்ந்த அந்த தருணமே எனது வாழ்வில் நான் மறக்க இயலாத தருணம்.

விருது வழங்கியதற்கான தகுதி:

பொதுவாகவே இவரிடம் குழந்தையை எந்த சிக்கலான தருணத்தில் விட்டுச் சென்றாலும், பெற்றோர்கள் தைரியமாக இருப்பார்களாம். உண்மைதான் குழந்தையை மோசமான தருணத்திலிருந்து நல்ல நிலைக்கு கொண்டு வருவதே அவர் தேர்வானதற்கு முக்கிய காரணம்.

பொதுவாக அவர் கூறும் வார்த்தையே இதுதான். குழந்தை என்பது ஒரு தாயின் பத்துமாத கனவு, ஒரு குடும்பத்தின் பொக்கிஷம் என்று கூறுவார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.