திருச்சிக்கு வரும் பயணிகளே உஷார்…..உஷார்…உஷார்..,

0
Business trichy

திருச்சிக்கு வரும் பயணிகளே உஷார்…..உஷார்…உஷார்..,

திருச்சியில் சமீப காலமாக வெளியூர் பயணிகளை குறிவைத்து தூக்கும் விபச்சார கும்பல்கள் தலைதூக்கி காணப்படுகின்றன. அவ்வாறு சிக்கும் நபர்களை இக்கும்பல் விபச்சாரத்தில் ஈடுப்படுத்துவதுடன் அவர்களிடம் இருக்கும் பணம், நகை, செல்போன் முதற்கொண்டு பறித்துக்கொள்கின்றனர் என்று தகவல் வெளிவந்தது.

இதுதொடர்பாக நாம் விசாரித்த போது, பொதுமக்கள் அளித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாநகருக்குள் முக்கிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், மிளகுப்பாறை, கருமண்டபம், மார்க்கெட், திருவானைக்காவல் புதுப்பாலம் கீழுள்ள பகுதிகளில் இக்கும்பல் இரவு நேரத்தில் தொழிலை தைரியமாக செய்துவருவதாக கூறப்படுகிறது.

Image
Rashinee album

மத்திய பேருந்து நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் இக்கும்பல் தனது வேட்டையை ஆரம்பித்து விடுவதாகவும். வெளியூரிலிருந்து தனியாக பயணித்து வரும் நபர்களை பின் தொடர்ந்து செல்வதுடன் அவர்களின் முன் அறையும் குறையுமாக ஆடைகளை அணிந்து அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி கவனத்தை திசை திரும்புகின்றனர். பின்னர் அவர்களின் நிலயை அறிந்து அவர்களை விபச்சாரத்திற்கு ஈசியாக கொண்டுச்செல்கின்றனர். அவ்வாறு கொண்டுச்செல்லும் கும்பலில் பெரும்பாலும் திருநங்கைகள் இருப்பதாக தெரிகிறது.
அப்படி சிக்கும் நபர்களை இக்கும்பல் மிளகுப்பாறை, கருமண்டபம் போன்ற ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டுசெல்கின்றனர். பின்னர் அவர்களின் திட்டப்படி அங்கு காத்திருக்கும் கும்பல் சிக்கிய நபரிடம் இருக்கும் அனைத்து உடமைகளையும் அடித்து பிடுங்குகின்றனர்.

மேலும் இதுப்போன்றே திருச்சி திருவானைக்காவலில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் கீழேயும் ஒரு கும்பல் செய்து வருவதாகவும் இரவு நேரத்தில் அவ்வழியே பயணிக்கும் மக்களை ஆண், பெண் என்று பாராமல் விபச்சாரத்திற்கு அழைப்பதாகவும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

திருச்சியில் விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் என்னதான் ரைடு வைத்தாலும், இக்கும்பல் சைடு போட்டு வேட்டையை நிகழ்த்தி கொண்டுதான் வருகிறது.

Ukr

Leave A Reply

Your email address will not be published.