ஒரு கதை சொல்லட்டா சார் ?

0
1 full

ஒரு கதை சொல்லட்டா சார்!!!

என்னுடைய வகுப்பு அது… ஆண்,பெண் என இருபாலருக்கும் அதிலே சமபங்கு இருக்கு.
2 full
சத்தத்திற்கும் சாமர்த்திய பேச்சுக்கும் பஞ்சம் கொஞ்சமும் இல்லாத தலைகளைக் கொண்ட வகுப்பறை எனது…
மணி அடித்த அடுத்த 5 நிமிட இடைவெளியில் ஆசிரியர் அன்னக்கி வகுப்புக்கு வந்தாரு.
வழக்கம்போல பாடம் நடத்தல,
வாழ்க்கைல இப்படி பண்ணனும்,
அத செய்யுங்க,
வாழ்க்கைலமுன்னேற வழியபாருங்கன்னு பேச ஆரம்பித்தாரு…
அவரோட போச்சில் இடையிடையே வழக்கமான அவர் மொபைல்போன் ஒலிக்கும்.
“விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் ” ன்னு பாடல் ஓசை ஒலிக்கிறப்போலாம்,இப்ப Bigg-boss ல இருக்கிற ஜனனி ஐயர் முகம் பலருக்கும் கண்முன்னால் வந்துட்டு போகும்.போன் பேசி முடிச்சதும் ஆசிரியர் மறுபடியும் வந்து ” எதுல விட்டேன் “னு கேட்டுட்டு வழக்கமான அறிவுரை பேச்ச அரைகுறையாக ஆரம்பிப்பாரு…
ஏன் உங்க எல்லாருக்கும் படிக்கிறதுல ஆர்வமே இல்ல,ஏனோ தானோன்னு இருக்கீங்க.எப்பபாரு ஆன்லைன், முகத்தில அரை இன்ச்சுக்கு தாடி,
புது படங்கள் வந்தா பிடித்த ஹீரோவா இருந்தா கட்டவுட்க்கு  பால் ஊத்துறீங்க, பிடிக்காத ஹீரோனா வெறுப்ப காட்டுறீங்க,
மீடியாவே கதீன்னும்,பிறரை கலாய்ச்சி மீம்ஸ்சும் போடுறீங்க,
சில கெட்ட பழக்கம் இதுலாம் தப்புங்கன்னு சோர்ந்து போகும் அளவு அட்வைஸ் தொடர்ந்தது… சேர்ந்து படிங்க,குரூப்பா படிங்க அப்பதான் தெரியாதத மத்தவங்களும் தெரிஞ்சுப்பாங்கன்னு அறிவுரைகள் சொன்னாரு. இஷ்டம்ன்னா செய்ங்க,
இல்லன்னா விட்டுடுங்கன்னு எல்லாம் சொல்லிட்டு கடைசியா வழக்கம் போல இதையும் சொன்னாரு…
ஆனா,,,அவர் சொன்ன சினிமா நடிகர்களுக்கு பாலபிஷேகம்,
பசங்க தாடி வளர்க்கிறது,பார்க்கு போரது,மீடியா மீதான குற்றச்சாட்டுகள்,பாலியல் தொந்தரவுகள் – இதெல்லாம் இப்ப இருக்கிற இளைஞர்களாகிய நாங்களா பண்ணுரோம்,இல்லயே அடித்தளம் போட்டு ஆரம்பிக்கிறதெல்லாம் ஆரம்பிச்சிவிட்டுட்டு, அந்த தப்ப இந்த ஜெனரேஷன்கும் சுமந்து வந்தது 1970வது 80 களில் யூத்தாவும்,கல்லூரி மாணவர்களாகவும், தற்போது சமுதாயத்தில் பெரிய தலைகளாகவும், முக்கிய பொறுப்புகளிலும் இருக்கிற அந்த இளைஞர்களது தவறு தானே…
நல்லா யோசிச்சு பாருங்க சினிமா நடிகர்கள் மீதான மோகத்துல மொத்த வாழ்க்கையையே தொலைக்கிறது இப்ப இருக்கிற இளைஞர்களா???,கட்டவுட்டுக்கு பால் ஊத்தினதும்,தாடிய – டிரெண்டாக்கினதும் இப்ப இருக்கிற இளைஞர்கள் இல்லையே ! இன்னும் கொஞ்சம் ஆழமா யோசிங்க ஏழு,எட்டு வயசு பிள்ளைய பேத்தியா பார்க்காம போதை பொருளா பார்த்தது யாரு???
இப்ப சமுதாய கேடுக்கு காரணம் இளைஞர்கள் மட்டும் அல்ல 40-80 வயதான எல்லாரும் தான் காரணம்.70 வயது கிழவரால பாதிக்கப்படுவது 7 வயது சிறுமி தானே.அப்ப தப்பெல்லாம் வயதானவர்கள் பண்ணிட்டு பழி எல்லாம் இளைஞர்கள் மேல போடுரது எந்த விதத்தில நியாயம். அதுக்காக இளைஞர்கள் தப்பு செய்யலன்னு சொல்லலை.
தற்போதைய சமுதாயத்தில முதலிடத்தில் இருக்கிற பிரச்சனை – குழந்தைகள்,பெண்கள் மீதான பாலியல் தொந்தரவு, அதற்கான விழிப்புணர்வு கல்வி,
விழிப்புணர்வு ஆலோசனைகள் எல்லாம் குழந்தைகளுக்கு மட்டும் கற்பித்தா போதாது ,கட்டாயம் அனைவரும் புரிந்துகொள்கின்ற அளவு வயதானவர்களுக்கும் போதிக்கனும்.தண்டனைகளோட வலியையும் பயத்தையும் சேர்த்தே போதிக்கனும் , அப்போது தான் தவறுகளுக்கு கை நீளாமல் இருக்கும்.
இப்படியே யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஆசிரியரின் அட்வைஸ்சும் முடிந்தது ,என் வகுப்பும் முடிந்தது…
 தொகுப்பு – ரா.நிருபன்.
3 half

Leave A Reply

Your email address will not be published.