ஒபாமாவிடம் கேள்வி கேட்ட தமிழன்…

0
Full Page

அமெரிக்க அதிபராக பராக் உசேன் ஒபாமா பதவியில் இருக்கும் போது தமிழர் ஒருவரது கேள்வியால் வியப்படைந்தார்.அப்படிப்பட்ட பர்மா தமிழனின் வருகையை அறிந்து அவரை சந்தித்தோம்.

1. தங்களைப் பற்றி கூறுங்கள்?

    கேள்வியை கேட்டவுடன் என்னைப்பற்றி கூற ஒன்றும் இல்லை நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்று கூறி புன்னகைத்தார். சரி என்று கூறி சில நிமிடங்கள் யோசித்து நல்ல தமிழில்

பேச ஆரம்பித்தார்.

என் பெயர் அகத்தியன்.

தமிழ்நாட்டுக்கு முதல்முறையாக வருகிறேன். என் அப்பா பெயர்- சேதுபதி,அம்மா மணிமேகலை. என் உடன்பிறப்புகள் ஒரு அண்ணன் சின்னமருது,இரண்டு அக்காக்கள் – ராவனேஸ்வரி,மண்டோதரி. நான் கடைசி மகன்.நான் பிறந்தது,

வளர்ந்தது எல்லாம் மியான்மர் (பர்மா)ரங்கூனில் தெங்கான்சூன் என்ற மாவட்டத்தில் தான்.நான் சட்டம் இறுதி ஆண்டு படிச்சிக்கிட்டு இருக்கேன்.அமெரிக்காவின் எம்பஸில-மைக்ரோ அக்சஸ்-புரோகிராம்ல ஒரு கோர்ஸ் முடிச்சிருக்கேன்.எம்பாஸ்டர் யூத் கவுன்சில் – அதில் மியான்மரில் மொத்தம் 15 பேரில் ஒருவராக இருக்கிறேன்.இப்போது டூரிசம்(சுற்றுலாத்துறை)மீதான ஆர்வத்தில பர்மா முழுக்க சுற்றிகாமிப்பது,விமான பயணத்தை எளிமைப்படுத்துவது போன்ற பணிகளையும் செய்துவருகிறேன்.

என் குடும்பத்தில் இந்தியாவிலிருந்து என் தாத்தா ராமநாதபுரத்திலிருந்து மியான்மர் (பர்மா)க்கு வந்தார்.பிறகு பர்மாவிலேயே வாழ்வு அமைந்துவிட்டது.

2. பர்மாவின் தமிழ்சங்கம் குறித்தும்,

பர்மாவில் வாழும் தமிழ்மக்கள் எப்படி தமிழ் கற்கிறார்கள் என்பது பற்றி ?

தமிழரின் அனைத்துவகை விழாக்களும் நாங்கள் பர்மாவில் அனைத்து தமிழர்களும் தமிழ்ச்சங்கத்தில் ஒன்றுகூடி சிறப்பாக கொண்டாடுவோம்.

ஒவ்வொரு விழாவும் சிறப்பாக, பட்டிமன்றங்கள்,போட்டிகள் நிகழ்த்துவது என மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தமிழ்ச் செய்திகள், படங்களையும் பார்த்து மகிழ்வோம்.தமிழை- பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்.இதை சேவையாக பர்மாவில் நினைப்பவர்கள் பலர்.

நான் தற்போது 98வயதாகும் நேதாஜியின்  I.N.A படையில் இருந்து சுதந்திரத்தின் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்ற தமிழர்.  ஏம்பல் சு.ப.முத்துவேலு பிள்ளை அவர்களிடம் தமிழ் மொழி, இந்திய நாட்டு பண்பாடுபற்றி தெரிந்துக்கொண்டேன்.அவர் 1943ல் நேதாஜி பஸ்ட் கமிட்டி படையில் இருந்தவர்.மியான்மர் ” இந்து தமிழ் மன்றம்”- மூலம் முத்தமிழ் காவலர், இசை காவலர் போன்ற பட்டங்களை பெற்றவர் நான் அவரிடமே தமிழைக்கற்றேன்.மேலும் திரு. கண்ணப்பன் இளங்கோவன் ஜயா அவர்களின் வழிகாட்டுதலால் வள்ளலாரின் சைவ சமய கொள்கைகளை பின்பற்றி வாழ்கிறேன்.இவர்களை போல் பர்மாவில் பலர் உள்ளனர்.

3.ஒபாமாவின் சந்திப்பு எப்படி வாய்ப்பு கிடைத்தது, மறுநாள் பத்திரிக்கைகளில் உங்களைப்பற்றி

என்ன எழுதப்பட்டது?

BBC, CNN போன்ற பல ஊடகங்கள் அந்த அரங்கத்தில் இருந்தது.அந்த சபையில் பலநாட்டிலிருந்து வந்தவர்கள் ஒபாமாவிடம் தங்கள் கேள்விகளை கேட்டனர்.என் வாய்ப்பு வரும்போது நான் அவரிடம்

” மியன்மா நாடு இப்போது ஜனநாயக மாற்றத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.எங்கள்

Half page

நாடு பலதுறைகளில் பலவிதமான சவால்களை சந்தித்து வருகிறது. நீங்கள் மியன்மார் நாட்டின் அதிபராக இருந்தால் எங்கள் நாடு முதிர்ச்சியடைந்து முன்னேறுவதற்கு எந்தத் துறையில் முதலில் கவனம் செலுத்துவீர்கள் ?”

         – மியான்மர் தமிழர் அகத்தியன்.

என்ற கேள்வியைக்கேட்டேன்.அதற்கு ஒபாமா அவர்கள் ஒவ்வொரு துறைக்குறித்தும் தெளிவாக, ஆழமான நுணுக்கங்களையும் பதிலாக வழங்கினார்.அந்த பதில் எனக்கு மிகவும் வியப்பை அளித்தது.

என் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு அவர் வழங்கிய ஆலோசனையாகவும் அமைந்தது.

அடுத்த நாள் அந்த கேள்வி பர்மா முழுக்கவும் பல ஊடகங்களையும் பரபரப்பாக பேசப்பட்டது.

பத்திரிக்கையாளர்கள் என்னிடம்- நீங்கள் எந்த பதிலை எதிர்ப்பார்த்து இந்த கேள்வியை அதிபர் ஒபாமாவிடம் கேட்டிங்க என்ற கேள்விதான் பத்திரிகையாளர்களிடம் எழுந்தது.அதற்கு நான் ,

பர்மா 2014க்கு பிறகுதான் ஜனநாயக மாற்றத்தை பெற்றுவரக்கூடிய ஒரு நாடு.மேலும் பர்மா – அமெரிக்காவின் சிமிலர்

கண்ட்ரி ஏன் என்றால் பர்மாவில் 135பிரிவு இனம் இருக்கின்றது அதேபோல் நிறைய இனங்கள் மதங்கள் கொண்ட அமெரிக்காவினை போல் பர்மாவும் உள்ளது.டைவர்சிட்டி அண்ட் யுனிட்டி என்பதை நீங்கள் பர்மாவின் அதிபரானால் என்ன செய்வீர்கள், பர்மாவின் எல்லாவித துறைகளுமே இப்போதுதான் வளர்ச்சியினை கண்டு வருகின்றது அப்படி இருக்க இதை படிக்கும் மாணவர்கள் முதல் அனைத்துவித மக்களும் அறிந்துக் கொள்ளுதல் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு அப்படி ஒரு கேள்வியை நான் முன்வைத்தேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினேன்.

4.பத்திரிக்கையாளர்கள் என்னை மடக்க இன்னொரு கேள்வியையும் கேட்டார்கள்?

அமெரிக்காவின் அதிபர் அவரை கேள்விக்கேட்க ஒரு வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுத்ததைப்போன்று பர்மா(மியான்மர்)வின் அதிபர் ஏன் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்ற கேள்வியை என்னிடம் பத்திரிக்கையாளர்கள் எழுப்பினார்கள்?

எனக்கு தெரிந்துவிட்டது நான் மிகவும் கவனமாக இக்கேள்விக்கு பதில் கூறவேண்டியது அவசியம் என்று.நான் மிகவும் கவனமாக கூறினேன் – பர்மா நாடு இப்போது தான் ஜனநாயகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. நாட்டுக்கு பல துறைகளில் சவால்கள் நிறைந்துள்ளது. கல்வி,பொருளாதாரம், சட்டத்திட்டங்களை அனைவருக்கும் சமமாக உருவாக்குவது. 2015ல் தான் எலக்ஸன் வைத்திருக்கிறோம்.

அப்படியிருக்க எங்கள் நாட்டு தலைவர்கள் பல துறைகளில் நல்ல முன்னேற்றம் கண்ட பிறகு எங்களுக்கு வாய்ப்பை வழங்குவார்கள் என்பதை நான் தெரிவித்தேன்.

அவ்வளவு பெரிய சபையில் என்னை ஒபாமா தேர்ந்தெடுத்தது மிகவும் நல்ல வாய்ப்பாக கருதினேன்.அந்த

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும்

முன் பலரிடம் ஆலோசனை கேட்டேன். ஆனால் எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை என்மனதில் தோன்றிய அக்கேள்வியை கேட்டு வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்.ஒபாமா அவர்களும் என் கேள்விக்கு மற்றவர்கள் கேட்ட கேள்வியைவிட என் கேள்விக்கு மிககவனமாக நல்ல ஆரோக்கியமான பதிலை 14நிமிடங்கள் வழங்கி சிறப்பித்தார்.மேலும் ஒவ்வொரு துறைக்குறித்தும் ஆலோசனைகளை நுணுக்கமாக வழங்கிவிட்டு சென்றார்.

தங்கள் தமிழ்நாட்டுப்பயணம் எப்படி இருக்கிறது?

ஆம்,, நான் முதல்முறையாக தமிழகம் வந்துள்ளேன்.தமிழ் எங்கள் உயிர்மூச்சு.தமிழ்நாட்டு சிறப்புகள் அனைத்தையும் இயன்றவரை சுற்றிப்பார்த்தவண்ணம் உள்ளேன். பர்மாவில் வாழ்ந்துவந்தாலும் தமிழனாய் வாழ்வோம் நன்றிகள் பல.வருகிறேன் என்று கூறி மீண்டும் பர்மாவிற்கு செல்ல தயாரானார் அகத்தியன்.

தொகுப்பு – ரா.நிரஞ்சனா.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.