அடக்க முயலாதீர்… கடக்க முயலுங்கள்…!

0

மயங்க முயலாதீர் 
மடைமாற்ற முயலுங்கள்

கண்ணனின் காமம் கீதையானது
அனுமனின் காமம் வீரமானது

மீராவின் காமம் பக்தியானது
சாணக்கியனின் காமம் புத்தியானது

ஆண்டாளின் காமம் பாசுரமானது
பாரதியின் காமம் கவிதையானது

காமம் காமமாய் இருக்க நாற்றமே மிஞ்சும் 
கவிதையாய் மாற நறுமணம் கமழும்

அடக்க முயலாதீர்…
கடக்க முயலுங்கள்…!

Leave A Reply

Your email address will not be published.