திருச்சி விமான நிலையத்துக்கு வந்த வாலிபர் உடலினால் பரபரப்பு.

0
Business trichy

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த வாலிபர் உடலினால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, வலங்கொண்டான் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி, விவசாயி. இவரது மகன் பார்த்திபன் (25). கடந்த 5 ஆண்டாக பார்த்திபன் மலேசியாவில் பணிபுரிந்து வந்த நிலையில், இதில் மூன்று ஆண்டு உணவு விடுதியில் பணியாற்றிவிட்டு அதன் பிறகு பத்திரிகை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

MDMK

இவர் கடந்த 5ம் தேதி பைக்கில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பங்சர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Kavi furniture

உடனடியாக மலேசியாவில் இருந்து குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த தமிழக நண்பர்களான மக்கள் பாதை மற்றும் அயலக உதவி குழு மூலம் பார்த்திபனின் உடலானது விமானம் மூலம் நேற்று காலை திருச்சி கொண்டுவரப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து வலங்கொண்டான் விடுதிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.