திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக அறிவிப்பு

0
1 full

மதுரை , கிரேஸ் கென்னட் பவுண்டேசன் – மழலை இல்லம் , சிறப்பு தத்துவள மையத்தில் (SAA) உள்ள ஆண்குழந்தை அஜித்குமார் தொடர்பான விவரங்கள்:

படத்தில் காணும் ஆண்குழந்தை திருச்சிராப்பள்ளி , புலிவலம் , ஆதிதிராவிடர் தெருவில், பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில், பிறந்து மூன்று மணி நேரமே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டு, மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையின் தொட்டில் குழந்தை திட்டத்தில் அனுமதிக்கப்பட்டது.   ஆண் குழந்தைக்கு அஜித்குமார்  என பெயரிடப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூகநல அலுவலரின் உத்தரவின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு, தற்காலிக வைப்பு ஆணை (TEMPORARY CUSTODY ORDER) பெறப்பட்டு,  மதுரை, கிரேஸ் கென்னட் பவுண்டேசன் – மழலை இல்லம் , சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பினை காண்பவர்கள் இக்குழந்தையைப் பற்றிய விபரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால்  இருபத்து ஒரு நாட்களுக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக் குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவ்வாறு தகவல் தெரிவிக்காவிடில் இக்குழந்தையை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் என்பதை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்படுகிறது.

2 full

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

 

தலைவர் / உறுப்பினர்கள்

குழந்தைகள் நலக்குழு,

அரசு கூர்நோக்கு இல்லம்,

E.B.ரோடு,திருச்சிராப்பள்ளி-2

அலை பேசி எண்: 9629929412         

 

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,

ரேஸ்கோர்ஸ் ரோடு,

காஜாமலை, திருச்சிராப்பள்ளி-23

அலை பேசி எண்: 0431-2421055 /

9047283819

 

 

 

 

 

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.