திருச்சியில் பேரிடர் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

0
Business trichy

திருச்சியில் பேரிடர் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புயல், மழை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பேரிடர் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் சிவராசு பேசும்போது கூறியதாவது:-

Half page

திருச்சி மாவட்டத்தில் பேரிடர் ஏற்பட்டால் அதனை தணிக்கும் பொருட்டும், உடனடியாக செயல்படுவதற்கும் 540 முதல்நிலை மீட்புப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் தன்னார்வலர்கள் ஆவர். பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறையால் 2018 முதல் ஒரு செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் மழைமானி அமைக்கப்பட்டுள்ள 25 இடங்களின் மழையளவு, காலநிலை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் தீவிபத்து ஏற்படும் காலங்களில் எப்படி செயல்பட வேண்டும், எப்படி செயல்படக்கூடாது என்ற விவரங்கள் மற்றும் பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு அறிக்கைகள் ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பேரிடர்களால் ஏற்படும் மனித உயிரிழப்பு, வீடுகள் சேதம், சாலைகளில் காற்றினால் மரம் முறிந்து விழுதல், போக்குவரத்து தடை, மின்கம்பி அறுந்து விழுதல், மின்கம்பம் விழுதல், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்படுதல், நீர்நிலைப்பிடிப்புகளில் அபாயகரமான அளவில் நீர்வரத்து ஆகிய விவரங்களை புகாராகவோ அல்லது தகவலாகவோ இச்செயலியின் மூலம் பதிவு செய்யலாம். இதன்மூலம் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவருத்ரய்யா, மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.