திருச்சியில் அமமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.

0
Business trichy

திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காதர் உசேன் இவரது மகன் ஜாவித் உசேன் (வயது 24), அமமுக பிரமுகரான இவர் ரயில்வே அப்ரெண்டிஸ் முடித்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் மேலக்கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து போர்டு அருகே உள்ள கோழிக்கடை ஒன்றில் கறி வாங்கிக்கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக ஜாவித்தை தாக்கியுள்ளனர்.

web designer

அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜாவித் அருகில் உள்ள பால் பூத்திற்கு ஒடியுள்ளார். பின் தொடர்ந்து சென்ற கும்பல் ஜாவீத்தை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜாவித் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுத்தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து ஜாவித் கொலையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் போலீசார் அப்பகுதியில் இருக்கும் சிசி டி வி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு இணை ஆணையர் நிஷா, போலீஸ் உதவி கமிஷ்னர் மணிகண்டன் மற்றும் அரியமங்கலம் போலீசார் வந்து பார்வையிட்டனர்.

இக்கொலை தொடர்பாக காவல் துறையினருக்கு பல சந்தேகம் நிலவி வருகிறது, கொலை செய்யப்பட ஜாவித் உசேன், டிடிவி தினகரன் கட்சியில் பொன்மலைை பகுதி சிறுபான்மைை பிரிவு செயலாளராக இருந்து வந்ததாகவும், முன்விரோத காரணத்தினாலோ இல்லை காதல் பிரச்சனையாலோ இப்பிரச்சனை நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொன்மலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.