அறிவோம் தொல்லியல்-14 பயணங்கள் முடிவதில்லை…

0
1

பெருங்கற்படை குறியீடுகள்:

வட்டிலில் இடப்பட்ட கீறல்கள் இரண்டும் கீழே விளக்கப்பட்டுள்ளன. (இடமிருந்து வலமாக)

  1. மூன்று அகடுகளும் மூன்று முகடுகளும் கொண்ட ஒரு அலை வடிவ
4

வளை கோடு.

  1. ஒரு U வடிவ அமைப்பினுள்ளே, ஒரு மையக் கோடு U வடிவத்தை

இரண்டாகப் பிரிக்கிறது. மையக் கோடு மேல் பகுதியில் நீண்டு

துருத்திக் கொண்டு நிற்கிறது. இரண்டு U  வடிவக் கீறல்கள், ஒன்றை

ஒன்று மேல் விளிம்பில் இணைக்கின்றன.

சிந்து சமவெளி குறியீடுகளுடன் ஓர் ஒப்பீடு:

2

(குறியீட்டு எண்கள் ஐராவதம் மகாதேவனின் சிந்து வெளி குறியீடுகளின் அட்டவணைப்படி எடுத்தாளப்பட்டுள்ளன)

குறியீடு 1:

இது சிந்து வெளிக் குறியீட்டு  குன்றை  ஒத்துள்ளது. குன்று அமைப்பின் சற்றே திரிந்த நிலை  கொண்ட கீறல் ஆகும். பொதுவாக மூன்று முக்கோணங்கள் பக்கவாட்டில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டால் போன்ற அமைப்புடையது.  அடித்தளத்திலிருந்து கிளம்பிய மூன்று முக்கோணங்கள் போன்று காட்சி அளிக்கும். இதனின்றும் திரிந்த குன்று  அமைப்புகளும் மகாதேவனால் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.

(மூன்று முக்கோணங்களும் அதன் ஒவ்வொரு சிகரத்திலும் மூன்று கோடுகளும் அமைந்த வடிவம்),  (மூன்று முக்கோணங்களும் சற்றே 45 பாகை இடப்புறம் சரிந்தது போன்ற அமைப்பு),  (இடப்பக்கம் இருந்து 90 பாகை செங்குத்தாக நிலை நிறுத்தியது போன்ற உருவம்) மற்றும்  (அடிகோடு இல்லாத மூன்று முக்கோணங்கள் நிமிர் நிலையில் உள்ள கோலம்). இந்த கோலம் 90 பாகை வலது புறம் திருப்பியது போன்ற நிலை செம்பியன் கண்டியூர் வட்டிலில் உள்ள வடிவம் என்பது தெளிபு.

குறியீடு 2:

உரல் உலக்கை அல்லது நாம வடிவத்தைக் கொண்ட குறியீடு. ஐந்துக்கும் மேற்பட்ட திரிநிலைகளைக் கொண்டவையாகும். சில உலக்கைகளின் அடிப்பகுதி (பிடங்கு) குமிழ் அமைப்பிலும், சில முக்கோண வடிவு தலைகீழாகப் புரட்டப்பட்ட நிலையிலும், சிலவற்றில் நடுக்கோடு ஒன்று U  மற்றும் V வடிவ உரலுக்கு மத்தியில் இருப்பதுபோன்ற நிலையிலும் இருக்கின்றன. திரிபு எண் மற்றும்  ஒன்றற்கொன்று சிறு மாற்றங்கள் உடைய குமிழ் தோற்றம் கொண்ட பிடங்கையும்,  கவிழ் நிலையில் உள்ள முக்கோணப் பிடங்கையும்,  உலக்கைக்குப்பதில் வெறும் முக்கோணமாகவும்,  U வடிவ உரலும் வரி வடிவ உலக்கையையும்,  U  தோற்றம் கொண்ட குழாயும் நீள் கோட்டு வடிவ சற்றே வெளி நீண்ட உலக்கையையும்,  V  வடிவ கூம்பும், மத்தியில் உலக்கையும் கொண்ட மாற்று அமைப்புகள் ஆகும். பெருங்கற்படைக் காலத்தைச் சார்ந்த குறியீட்டுக் கீறல்கள் கொண்ட செம்பியன் கண்டியூர் வட்டில் ஒன்றும், சிந்து வெளி தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ள கீறல்களுக்கு ஒத்த அமைப்பு கொண்ட குறியீடுகளும், அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள பண்பொத்த குறியீடுகள்  மற்றும் அவற்றின் திரிபுகளும்  காட்டப்பட்டுள்ளன.

நாமம் அல்லது உரல் உலக்கை இடுகுறி இரு முறை மீண்டும் மீண்டும் வருவது,இது வரை எந்த சிந்து வெளித் தகட்டிலும் அல்லது படத்திலும் இப்படி வந்ததில்லை.

இவ்வூரை சுற்றியிலுள்ள ஊர்கள் இன்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாய் உள்ளது கூடுதல் சிறப்பு.

வரும் வாரம் முதல் தொல் தமிழ் எழுத்துகளான பிராமி எனப்படும் தமிழி எழுத்துக்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை பார்ப்போம்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்