ஏன் மார்க்ஸ் எப்போதும் தேவைப்படுகிறார்?

ஏன் மார்க்ஸ் எப்போதும் தேவைப்படுகிறார்?
இன்று மார்க்ஸ் பிறந்த தினம்.
1. மனித உணர்வின் ஒப்புமையற்ற காதல் எப்படி ஓர் மகத்தான மனிதனை கொடிய வறுமையிலும் உருவாக்கும் சக்தி படைத்தது என்பதை மார்க்ஸ் – ஜென்னி காதலால் எப்போதும் உணரலாம் என்பதால்..

2. நட்பு என்னும் உறவு எத்துணை மகத்தான சக்தி வாய்ந்த செயல்களை உலகிற்கு அளிக்கும் ஆற்றல் படைத்தது என்பதை மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் மூலம் தெரிந்து கொள்ள
3. இயற்கைக்கும் மனிதர்களுக்குமிடையே உள்ளஉறவைப் புரிந்து கொள்ள, மனிதர்ளுக்கிடையேயான உற்பத்தி உறவுகளை புரிந்து கொள்ள
4. உற்பத்தியை மையமாகக் கொண்டே உலகம் இயங்குகிறது என்றும், உபரி மதிப்பே (Surplus value) இலாபம் கொழுத்து, முதலாளித்துவம் நிலை பெற ஆதி என்னும் அவர் கண்டறிந்த உண்மையை உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சென்று புரிய வைக்க ..
5. இன்று உலகின் 10% முதலாளிகள் 63% வளத்தையும் 50% தொழிலாளிகள் வெறும் 8% வளத்தையும் பெற்றிருக்கும் இமாலய இடைவெளியை குறைக்க

6. மனிதத்தை குழிதோண்டி புதைத்து விட்டு மதம், ஜாதி, இன உணர்வுகளைத் தூண்டி மக்களின் பிணங்களின் மீது அதிகாரத்தையும் ஆட்சியையும் தக்க வைக்கத் துடிக்கும் உலகெங்கும் வளர்ந்துவரும் வலதுசாரித் தத்துவத்தை வலிமையோடு எதிர்த்திட
7. இதுவரை உலகில் நடந்த போராட்டங்களெல்லாம் வர்க்கப் போராட்டங்களே என்னும் உண்மையை உணர வைக்கவும், முதலாளி – தொழிலாளி வர்க்கப் போராட்டமென்பது வெறும் கூலி உயர்வுப் போராட்டமல்ல அது அரசியல் போராட்டம் என்பதை ஒவ்வொரு கணமும் உணர்த்த .
8. உலகெங்கும் பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பட்டினிச் சாவுகளைத் தடுக்க சோஷலிமே அருமருந்து என்று சொல்லவும்…
9. ஆயுதங்களின் மூலம் போர்களை நடத்தி, பொருளாதாரத்தை அடியோடு நாசமாக்கி உயிர்களின் அழிவுக்கும் உலக அமைதிக்கும் எப்போதும் எமனாகவே இருக்கும் முதலாளித்துவத்தை எல்லாத் தளங்களிலும் எதிர்த்திட..
10. தொழிலாளர், குழந்தைகள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் உள்ளடங்கிய ஒட்டுமொத்த
‘மானிட குல விடுதலைக்கு
மாமேதை மார்க்ஸ் எப்போதும்
தேவைப்படுகிறார்.
நம்பிக்கையோடு
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
MBBS., DDVL.,
தோல் நோய் மருத்துவர்,
அறந்தாங்கி
9159969415
