கலைஞர் முக்கியம் கலைஞர் மேலே இருக்கிறார்

0
Full Page

கலைஞர் முக்கியம் கலைஞர் மேலே இருக்கிறார்

தமிழாற்றுப்படை வரிசையில் பெரியார்

கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்
திருச்சியில் நடைபெறுகிறது.

தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் 3000 ஆண்டு பேர் ஆளுமைகளை தமிழாற்றுப்படை என்ற வரிசையில் சில ஆண்டுகளாக கவிஞர் வைரமுத்து ஆய்வு கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்

Half page

இதுவரை தொல்காப்பியர் அவ்வையார் கபிலர் திருவள்ளுவர் இளங்கோவடிகள் செயங்கொண்டார் கம்பர் அப்பர் ஆண்டாள் திருமூலர் வள்ளலார் உ வே சாமிநாதையர் கால்ட்வெல் பாரதியார் பாரதிதாசன் அண்ணா கலைஞர் மறைமலை அடிகள் புதுமைப்பித்தன் கண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஜெயகாந்தன் அப்துல் ரகுமான் என்று 23 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார் தமிழ்நாட்டு படையின் நிறைவு கற்றையாக தந்தை பெரியாரை ஆய்வு செய்து திருச்சி கலைஞர் அரங்கத்தில் அரங்கேற்றயிருக்கிறார்

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி விழாவிற்கு தலைமை ஏற்கிறார் முன்னாள் அமைச்சர் கே என் நேரு தொடக்க உரையாற்றுகிறார் பேராசிரியர் அருணன் வாழ்த்துரை வழங்குகிறார் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு தமிழன்பர்கள் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்

திருச்சி வெற்றித் தமிழர் பேரவையின் தலைவர் பாஸ்கர் சந்திரன் சிவா மணி சீதாராமன் பிரகாஷ் கவிஞர் நந்தலாலா வரதராஜன் டிஆர்பி கதிரேசன் பேராசிரியர் குபேந்திரன் பீர் முகமது ஷேக் அகமது ஜெரால்ட் இக்னேசியஸ் வானதி ராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

மாலை நடைபெறும் முதல்வருக்கு காலையிலேயே கலைஞர் அறிவாலயம் வருகை தந்தனர் வைரமுத்துவும் மகன் மதன் கார்க்கியும்

மேடைக்கு சென்ற வைரமுத்து அங்குள்ள பேனரை பார்வையிட்டார் தமிழாற்றுப்படை பெரியார் கவிப்பேரரசு வைரமுத்து பேனரை பார்வையிட்டார் மேடையின் இடது ஓரம் பெரியார் படம் மலர்மாலை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார் பெரியார் படமும் வைரமுத்து குடும்பம் பேனரில் இடம் பெற்று இருந்தது சற்று மேலே பார்க்கும் பொழுது கலைஞர் உருவத்துடன் கலைஞர் அறிவாலயம் பெயர் இருந்தது அப்பொழுது கலைஞர் முக்கியம் மேலே இருக்கிறார் என்றார் பிறகு பார்வையாளர்கள் இருக்கை ஊடகத்திற்கான இருக்கை எப்படி அமைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார் ஒலிபெருக்கி எங்கு அமைக்க வேண்டும் எப்படி அமைக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தார் அறிவாலயம் முன்பு வாழைமரம் கட்டப்பட்டுள்ள பணியாளர்களிடம் பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார் அப்பொழுது உயரே வாழைமரம் கட்டிக்கொண்டிருந்தார் அவர்களுடன் சேர்த்து புகைப்படம் எடுக்கக் கோரி சிரித்தவாறு புகைப்படம் எடுத்துக்கொண்டார் அப்பொழுது விழா ஏற்பாட்டாளர்கள் தேர்தல் நடைபெற இருப்பதால் பிளக்ஸ் அதிகம் வைக்க இயலவில்லை என்பதை எடுத்துரைத்தார்கள் சட்டத்தை மதித்தே செயல்படுவோம் என்றார்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.