வேகத்தடை முறைப்படுத்தப்படுமா! விபத்து தடுக்கப்படுமா

0
Business trichy

வேகத்தடை முறைப்படுத்தப்படுமா!

விபத்து தடுக்கப்படுமா!

திருச்சி முக்கியமான சாலை சந்திப்புகள் பள்ளி கல்லூரி மருத்துவமனைகள் முன்பு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேகத்தடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவுகோலில் அமைக்கப்பட்டுள்ளது.

Full Page

இதனால் பல்வேறு இலகுரக கனரக வாகனங்கள் பாதிப்படைகின்றன. வேகத்தடையை கார் மற்றும் பேருந்து வாகனங்கள் கடக்கும் பொழுது உயரமாக இருக்கும் வேகத்தடையின் மீது காரின் அடிப்பாகம் பேருந்தின் படிக்கட்டுகள் உராய்வு ஏற்பட்டு சேதமடைகின்றன.

வேகத்தடையினை விதிப்படி முறைப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்

மேலும் சாலையில் அமைந்துள்ள வேகத்தடை மீது வர்ணம் பூச வேண்டும் வேகத்தடை முன்பு இரவில் ஒளிரும் எச்சரிக்கை விளக்கு பொருத்த வேண்டும்.

வாகன ஓட்டிகள் பலர் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனத்தை ஓட்டுவதால் பலர் விபத்துக்குள்ளாகிறார்கள்

எனவே பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் வேகத்தடை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Half page

Leave A Reply

Your email address will not be published.