திருச்சியில் கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்

தமிழாற்றுபடை பெரியார்
கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்
தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் 3000 ஆண்டு பேர் ஆளுமைகளை தமிழாற்றுப்படை என்ற வரிசையில் சில ஆண்டுகளாக கவிஞர் வைரமுத்து ஆய்வு கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்


இதுவரை தொல்காப்பியர் அவ்வையார் கபிலர் திருவள்ளுவர் இளங்கோவடிகள் செயங்கொண்டார் கம்பர் அப்பர் ஆண்டாள் திருமூலர் வள்ளலார் உ வே சாமிநாதையர் கால்ட்வெல் பாரதியார் பாரதிதாசன் அண்ணா கலைஞர் மறைமலை அடிகள் புதுமைப்பித்தன் கண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஜெயகாந்தன் அப்துல் ரகுமான் என்று 23 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார் தமிழாற்றுப்படையின் நிறைவு கற்றையாக தந்தை பெரியாரை ஆய்வு செய்து திருச்சி கலைஞர் அரங்கத்தில் அரங்கேற்றயிருக்கிறார்

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி விழாவிற்கு தலைமை ஏற்கிறார் முன்னாள் அமைச்சர் கே என் நேரு தொடக்க உரையாற்றுகிறார் பேராசிரியர் அருணன் வாழ்த்துரை வழங்குகிறார் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு தமிழன்பர்கள் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்
திருச்சி வெற்றித் தமிழர் பேரவையின் தலைவர் பாஸ்கர் சந்திரன் சிவா மணி சீதாராமன் பிரகாஷ் கவிஞர் நந்தலாலா வரதராஜன் டிஆர்பி கதிரேசன் பேராசிரியர் குபேந்திரன் பீர் முகமது ஷேக் அகமது ஜெரால்ட் இக்னேசியஸ் வானதி ராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
தமிழாற்றுப் படை வரிசையில் பெரியார் நிகழ்வானது திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மே 5ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.
