ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் என்பது மிக முக்கியமான அம்சம் – சத்குரு

0
Business trichy

 

ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் என்பது மிக முக்கியமான ஓர் அம்சம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் தெரிவித்துள்ளார்.

MDMK

ஐக்கிய நாடுகள் சபையானது மே 3-ம் தேதியை உலக ஊடக சுதந்திர தினமாக  1993-ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும் இந்த தினத்தில் ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Kavi furniture

இந்தாண்டு உலக ஊடக சுதந்திர தினம் நாளை (மே 3) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகத்தில், ஊடகச் சுதந்திரம் என்பது மிக முக்கியமான ஓர் அம்சம். அரசியல் மற்றும் நிறுவனங்களின் தாக்கம் இல்லாமல், ஜனநாயகத்தை நெறி பிறழாமல் வைத்திருப்பது தலையாய கடமை” என்று தெரிவித்துள்ளார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.