ராமலிங்கம் கொலையில் திருபுவனம் டூ திருச்சி சென்ற புலனாய்வு பிரிவு .

0
1 full

ராமலிங்கம் கொலை வழக்கு திருபுவனம் டூ திருச்சி சென்ற புலனாய்வு பிரிவு .

கும்பகோணம் அருகே ராமலிங்கம் கொலை வழக்குத் தொடர்பாக காரைக்கால், தஞ்சாவூர், திருச்சியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் மே 2 தேதியன்று விசாரணை மேற்கொண்டனர்.

2 full

கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). வாடகை பாத்திரக் கடை உரிமையாளர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிலர் மதபிரசங்கம் செய்துகொண்டிருந்தனர், அப்போது அந்த வழியாக சென்ற ராமலிங்கம் என்பவர், மத பிரசங்கம் செய்தவர்களுக்கு எதிராக நடந்துகொண்டார், அங்கிருந்த இஸ்லாமியரின் குள்ளாவை வாங்கி தன் தலையில் போட்டுக்கொண்டு, அவர்கள் நெற்றியில் விபூதியை பூசி ஆக்ரோஷமாக பேசினார், இந்த சம்பவம் சமூக வளைதலங்களில் வைரலாகி பரபரப்பானது.

இந்த நிலமையில் அன்று பணிகளை முடித்துவிட்டு தனது மூத்தமகனோடு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார் ராமலிங்கம். அப்போது இடைமறித்த சிலர் ராமலிங்கத்தின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். இந்தகொலை வழக்கில் 11 இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் கொலை பயன்படுத்திய வாகனம் திருச்சி பாலக்கரையில் பகுதியில் போலீஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை கண்டித்து பா,ஜ,க, இந்துமக்கள் கட்சி, ஆர்,எஸ்,எஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்கள் நடத்தினார்கள், அதனால் ராமலிங்கத்தின் கொலை தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே போராடங்கள் செய்ததால் இந்த வழக்கு என்.ஐ.ஏ.விற்கு ஏப்
14 ஆம் தேதி மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செளகத் அலி (கொச்சி) தலைமையிலான குழுவினர் திருவிடைமருதூர் பகுதியில் முகாமிட்டு, ஏப். 30ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமலிங்கத்தின் மகன் ஷியாம் சுந்தரிடம் விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பினர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரித்தனர்.

கும்பகோணம் மீன் சந்தை அருகேயுள்ள எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ள நிர்வாகிகளிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். இதேபோல, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் நகர அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த அமைப்பைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்தனர். இந்த விசாரணை ஏறத்தாழ 2 மணிநேரம் நடைபெற்றது. இதையொட்டி, அலுவலக வாயிலில் ஏறத்தாழ 10 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருச்சியில் தஞ்சாவூரில் நடைபெற்ற விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் சோதனை நடத்தினர். அப்போது, சீடி, புக் , கேசட் போன்றவை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அமைப்பின் மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு 8 மணி வரை நீடித்தது.

காரைக்காலில் இதேபோல் காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள குத்தூஸின் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை செய்யும் வகையில், தேசியப் புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த டி.எஸ்.பி. தலைமையிலான 7 பேர் காரைக்கால் வந்தனர். குத்தூஸ் வீட்டிலும், மார்க்கெட் வீதியில் உள்ள அலுவலகத்திலும் அதிகாலை 4 மணி முதல் சோதனை நடத்தினர். மேலும், அங்கிருந்தோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை பகல் 1 மணி வரை நீடித்தது. இக்குழுவினர் சில ஆவணங்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர், காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் டி. மாரிமுத்து தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸார் காரைக்காலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ராமலிங்கம் கொலை செய்த நாட்கள் முதல் அப்பகுதியில் தீவிர வாகன சோதனை மற்றும் கொலை நடந்த ராமலிங்கம் வீடு அமைந்துள்ள வீடுகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 half

Leave A Reply

Your email address will not be published.