திருச்சியில் கல்லூரி மாணவர்களை காவு கேட்கும் போதை கும்பல் ! .                          

0
Business trichy

திருச்சியில் கல்லூரி மாணவர்களை காவு கேட்கும் கும்பல்.                          

அரசு என்னதான் 18 வயதுக்கு உட்பட்டோருக்கும், பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் குட்கா பொருள் விநியோகிக்கக்கூடாது என்று சட்டம் போட்டாலும், அதையும் தாண்டி பல கடைக்காரர்கள் மாணவர்களுக்கு குட்கா பொருட்களை வழங்கி வியாபாரம் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.

Kavi furniture

அவ்வகையில் திருச்சியில் சமீபத்தில் உறையூர் அரசு பெரிய மருத்துவமனை அருகே ஓர் தனியார் மெடிக்கல் சென்டரில் போதை மாத்திரை விற்கப்பட்டுவந்தது. அதனை வாங்கி பயன்படுத்திய 18 வயதுக்குட்டபட்ட 3 நபர்கள் அவர்களின் கூட இருக்கும் ஒருவருக்கு ஊசி மூலம் தண்ணீரில் போதை பொருட்களை கையில் செலுத்தியபோது அந்த நபரின் கை செயலிழந்து போனது பின்னாளில் அந்த கை அழுகிய நிலைக்கு சென்றது. இதனையறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட மெடிக்கலை சீல் வைத்து மூடியதுடன் கடையின் உரிமையாளரையும் கைது செய்தனர்.

MDMK

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் திருச்சியில் போதை மாத்திரையை கல்லூரி மாணவர்களுக்கு காரில் கொண்டு சென்று விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி வயலூர் மெயின்ரோட்டில் காரில் வைத்து போதை மாத்திரை விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு வந்த தகவலின்படி போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். இதையறிந்த போதை மாத்திரை கும்பல் காரை எடுத்துக்கொண்டு திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கல்லூரி ஒன்றின் முன்பு சென்று நின்றது. அப்போது அங்கு தயாராக இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் காருக்குள் ஏறினர். துரத்திச்சென்ற போலீசார் காரில் இருந்தவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

பின்னர் பிடிப்பட்டவர்களிடம் விசாரிக்கையில் திருச்சி உலகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த யூரோன்சான்ஸ்(20), நியூராஜா காலனியைச் சேர்ந்த காஜாமைதீன்(22), கோட்டை பட்டவர்த்ரோட்டைச் சேர்ந்த வினோத் (25), என தெரியவந்தது. அவர்கள் வினோத்தின் காரில் சென்று கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்பளை செய்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள மெடிக்களில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கிய அவர்கள் போதை மாத்திரையாக பயன்படுத்துமாறு மாணவர்களிடம் கூறி விற்றுள்ளனர்.

சில நேரங்களில் போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் நரம்புகளில் செலுத்தியும் போதையை அனுபவித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்த கண்டோன்ட்மென்ட் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுப்போன்ற பல்வேறு விதமான போதைப் பொருட்களைக்கொண்டு மாணவர்களை தவறான வழிக்கு கூட்டிச்செல்லும் கும்பல்கள் பெருகிக்கொண்டுதான் வருகின்றன. அதிலும் இப்பொருட்கள் மிக எளிமையாக கல்லூரி மாணவர்களின் கைக்கு கிடைப்பதால் அவர்கள் விரைவில் பாதிப்புக்குள்ளாகி மற்றவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றனர். இருப்பினும் கூட இதுப்போன்ற போதை பொருட்கள் திருச்சியில் மார்க்கெட், ஜங்சன், சத்திரம் போன்ற பகுதிகளில் மூட்டை தூக்கும், ஹோட்டல் வேலை பார்க்கும் நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு சில மெடிக்கல்களில் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட மாத்திரைகளை வாங்கி செல்வதாகவும் கூறிவருகின்றனர் பொதுமக்களும் நமது நிருபர்கள் வட்டாரங்களும். இதுப்போன்ற கும்பல் மாணவர்களை காவு வாங்கும் முன் காப்பாற்றுமா காவல்துறை…..,,,,,

Pranav city

Leave A Reply

Your email address will not be published.