உலக சாதனை புரிந்த திருச்சி சிலம்பாட்ட வீரர்கள்

0
Full Page

உலக சாதனை புரிந்த திருச்சி சிலம்பாட்ட வீரர்கள்

சுருளி ஆண்டவர் கலைக்கூடம், எய்ம் டு ஹை அறக்கட்டளை இணைந்து கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியில் அதிகாலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

1 மணி நேரத்தில் 45 சிலம்பாட்ட வீரர்கள் சிலம்பத்தில் மூவர்ண ரிப்பன் கட்டப்பட்டு சுழற்றினார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 45 மாணவர்கள் பங்கேற்றார்கள். ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கப்பட்டது.

10 வயது மாணவி சுகிதா தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர். ஆர். கிருஷ்ணன் மற்றும் ஜெர்மெக்ஸ் நந்தகோபால் பங்கேற்றனர்

Half page

சிலம்ப மாணவன் காமேஷ் ஒரு மணி நேரத்தில் சிலம்பத்தில் ஒரு பிரிவான பிரளை 1500 செய்தார்.

370க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் தமிழகம் மற்றும் பிற மாநிலத்தில் இருந்து கலந்து கொண்டார்கள்

பரிசளிப்பு விழாவில் சுதந்திர போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு கலந்து கொண்டு அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் கொடுத்து பாராட்டி சிறப்புரையாற்றினார் கி.ஆ.பெ. விசுவநாதம் கல்வி குழும சேர்மன் மருத்துவர் செந்தில், தலைவர் ஜெயபால் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சிலம்பாட்ட பயிற்சியாளர் அரவிந்த் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.