அரங்கனின் விருப்பன் திருநாள் – சித்திரைத் தேர்..!

0
Business trichy

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி முதல் நாள் கூடி இரவில் கைக்குழந்தைகளுடன் திருக்கோயில் வளாகத்திலுள்ளும், வீதிகளிலும் படுத்துறங்கும் மக்கள்..! சித்திரை வீதியில் அங்க பிரதட்சணம் செய்யும் முரட்டு பக்தர்கள்..! இன்முகம் காட்டி, தயாள குணத்துடன் வீதிக்கு வீதி உணவுகள் விநியோகம் செய்யும் நல்லோர்கள்..! 

இது பக்த ஜன வத்ஸலன் அரங்கனின் ஒரு விருப்பமான திருநாளும் கூட..! மக்கள் வெள்ளத்தை உயரத்தில் நின்று, அபயமளித்து, கண்டு களித்து, தேரில் அவன் அசைந்தசைந்து வருவதே ஒரு அழகு..! ஸ்ரீரங்கத்தினை மாலிக்காபூர் படையினின்று மீ்ட்டு, ஏராளமான கிராம மக்களை ஒருங்கிணைத்து, மீண்டும் ஸ்ரீரங்கத்தினை மிளரச் செய்த ஒரு வைபவம் – இன்றும் இந்த நாளின் போது மிளிர்கின்றது நம் திருவரங்கம்..!

ஆய்ச்சியர்கள் தயிர் கடையும் போது கண்ணனின் லீலைகளை பாடிய வண்ணம் தயிர் கடைவர்களாம்..! அது, கண்ணன், வதம் செய்தவர்கள், ”ஐயோ..!” எனறு கத்திய, விண்ணில் பரவியுள்ள அமங்கல சப்த ஒலி தாக்கத்தினைப் போக்குமாம்..! அது போன்று கிராமமக்களின் ”கோவிந்தா” கோஷம் கடந்த காலங்களின் அமங்கல ஓசை தாக்கத்தினைப் போக்காதா என்ன…?! கோவிந்த நாம கீர்த்தன புண்யாஹம்…!

 

Full Page

Leave A Reply

Your email address will not be published.