டிரம்ஸ் இசையில் சாதிக்க துடிக்கும் திருச்சி இளைஞர்

குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். படிப்பு மற்றும் இதர துறையில் சாதிக்கலாம். இத்தகைய சாதனையை பெறுவதற்கு குழந்தைகளின் திறமை அறிந்து அதனை வெளிகொணர்வதே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது ஜே.டபிள்யு. டிரம்ஸ் அகாடமி.
நிறுவனர்:
இதன் நிறுவனர் ஜான் வில்லியம் திருச்சியை சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேயே டிரம்ஸ் வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். பிஷப் ஹீபர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது இவர் டிரம்ஸ் வாசித்ததை ஆசிரியை வெகுவாக பாரட்டினார். இவரது அகாடமியில் 27 பேர் டிரம்ஸ் பயின்று வருகின்றனர். இதில் 20 மாணவர்கள் 7 மாணவிகள்.


நன்மைகள்:
டிரம்ஸ் வாசிப்பதற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை அனைவரும் வாசிக்கலாம். டிரம்ஸ் வாசிக்கும் போது உடல் உறுப்புகள் அனைத்தும் இயங்குவதோடு மட்டுமல்லாமல் உடலும் மனமும் வலிமை பெறும். திருச்சியில் நடந்த திருவிழாவில் ஜான் வில்லியம் வாசித்த டிரம்ஸ் இசைக்கு அனைவரும் 15 நிமிடம் எழுந்து நின்று உற்சாகமாக ஆரவாரபடுத்தி கௌரவித்தது இவரது திறமைக்கு ஓர் எடுத்துகாட்டாக விளங்குகிறது.
திருச்சியில் உள்ள அனைத்து சர்ச்சுகளிலும் டிரம்ஸ் இசைத்து வருவதோடு மட்டுமில்லாமல் பெங்களுரிலும் நண்பர்களின் உதவியுடன் நிறுவனம் நடத்தி பயிற்சியும் அளித்து வருகிறார். மேலும் திருச்சியில் சிறந்த மாணவர்களை உருவாக்கி பேறும் புகழும் பெற வேண்டும் என்பதே இவரது இலட்சியமாகும்.
இவரது இலட்சியம் வெற்றி அடைய நம்ம திருச்சி வார இதழ் சார்பாக வாழ்த்துகிறோம்
-Advt
