13 வருட அனுபவமிக்க ஸ்ரீரெங்காஸ் பவன்

0
1

ஆண், பெண் இருபாலரும் வேலைக்கு செல்ல வேண்டிய காலம் இது. வருமானம் இரட்டிப்பாகிறது என்பது மகிழ்ச்சிதான், ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை தினமும் சமைப்பது. அலுவலகம் செல்ல வேண்டிய அவசரத்தில் அவசர சமையல். அலுவலகம் முடிந்த வந்தவுடன் அலுப்புடன் சமையல் என்று ஆகிவிட்டது இப்போதெல்லாம். அதனால் பலரும் ஹோட்டல்களை நாட ஆரம்பித்துவிட்டனர். தினமும் இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது அதிலும் யோசிக்க வேண்டியுள்ளது, ஹோட்டல் உணவு சுவையாக இருக்க வேண்டும் அதிலும் மசாலா பொருட்கள் ரசாயன பொருட்கள் கலக்காமலும் இருக்க வேண்டும் என்ற கவலை வேறு.

ஆனால் ஸ்ரீரங்கம் வாசிகளுக்கு அந்த கவலையே இல்லை, இருக்கவே இருக்கிறது ஸ்ரீ ரெங்காஸ் பவன். இங்கு நிற மூட்டிகளோ, சுவை ஊக்கிகளோ சேர்க்காமல் பாரம்பரிய முறைப்படி உணவு தயாரிக்கப்படுவதால் பல மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டாலும் வயிற்று கோளாறோ, வாயு கோளாறோ வராது என்பது சாப்பிட்டு செல்வோரின் உண்மை வார்த்தையாக அமைந்துள்ளது.

2

அதிலும் இங்கு தயாரிக்கப்படும் சேலை இடியாப்பத்துக்கு தனி மவுசு தான், இடியாப்பம் செய்து விற்பனைக்கு வைத்த 10 நிமிடங்களில் அத்தனையும் விற்றுவிடும். தோசை, இட்லி, என்று போனால் அதற்கு ஊற்றப்படும் விதவிதமான சட்னி, சாம்பார் சாப்பிடுவரை எழுந்திரிக்க  வைப்பதில்லை, 2 இட்லி சாப்பிடுவோரையும் 5 இட்லி சாப்பிடவைக்கும் விதமாக இங்குள்ள உணவு வகைகள் அமைந்துள்ளன.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டப ரோட்டில்  இயங்கிவருகிறது ஸ்ரீ ரெங்காஸ் பவன், இதனை ஸ்ரீனிவாசன், மாதவன் என்கிற சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 13 வருடமாக ஹோட்டல் துறையில் அனுபவமிக்க இவர்கள் ஸ்ரீரங்க வாழ் மக்களுக்கு தரத்திலும், சுவையிலும், உணவை மிகக்குறைந்த விலையில் வழங்கி வருகின்றனர். ஸ்ரீரங்கத்தில் ஆயிரம் ஹோட்டல்கள் இருந்தாலும் இவர்களின் ஹோட்டலை தேடி வருபவர்கள் இன்னும் இருக்கின்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.