ஸ்ரீரங்கம் ‘ஜீ’ கடை

0
Business trichy

திருச்சி ரங்கத்தில் உள்ள சேட்ஜி பானிபூரி கடையில் தினமும் சாயங்காலம் 5 மணிக்கெல்லாம் கூட்டம் களைகட்டுது.

இதுதொடர்பாக சேட்ஜி பானிபூரி கடை உரிமையாளர் முகேஷ்குமாரிடம் நாம் பேசுகையில், என் சொந்த ஊரு உத்திரபிரதேசம். திருச்சியில் சுமார் 35 வருடமா பானிபூரி விற்பனை வருகிறோம். முதலில் கடைகடையாக சமோசா போட்டு விற்பனை செய்து வந்தேன். என்னுடைய மாமனார் ராம்கோபால் குப்தா என்னுடைய உழைப்பைக் கண்டு ரங்கத்தில் அவர் வைத்திருந்த ஸ்வீட் கடை வாசலில் சிறிய அளவில் ஒரு சமோசா கடையை வைத்துத்தந்தார். கடையை அமைத்து தொடக்கத்தில் சிறிய முதலீட்டுலேயே நல்ல வியாபாரம் ஆனது.

MDMK

பின்னர் மாலை நேரங்களில் கூடுதலாக என்னுடைய பெற்றோர்களின் ஆதரவில் பானிபூரி விற்பனையை ஆரம்பித்தேன். திருச்சியிலேயே முதல்முறையாக பானிபூரியை அறிமுகப்படுத்தியது நாங்கள் தான். தொடக்கத்தில் ரங்கம் மட்டுமல்லாமல் திருச்சியை சுற்றியுள்ள பல்வேறு பகுதியிலிருந்து பலர் விரும்பி வந்து சாப்பிட்டு செல்வதுடன் பார்சலாகவும் வீட்டிற்கு வாங்கியும் செல்வார்கள். நாங்கள் செய்யும் பானிபூரி வாங்க வரும் மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றதுடன், ‘ஜி’ கடை என்ற பெயரும் கிடைத்தது என்றார்.

Kavi furniture


எந்த தொழிலுக்கும் ரகசியம் உண்டு. அந்த வகையில் எங்களுடைய பானிபூரி கடைக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது, எங்களின் கடையில் எந்தஒரு ரசாயனமும் கலக்காமல் உண்மையான சுவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். தினமும் காளான். பானிபூரி , மசாலா பூரி, பாதம் மில்க், ரோஸ் மில்க், ஜாட்ஸ், குழந்தைகளுக்கான ஆரோக்கியமூட்டும் பொருட்கள், பிஸ்தா மில்க், பாவ் பாஜி, பன்னீர் பாவ் பாஜி என்று எங்களுடைய சொந்த தயாரிப்பையே விற்பனை செய்து வருகிறோம்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.