மனதிற்கான மொழிகள்….

0

ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டுள்ளவரை கடந்துசெல்லும்போது அவர் உங்களைப் பார்த்து புன்னகைக்கவில்லை என்றால் வாழ்த்து சொல்லவில்லை என்றால், 
“அவருக்கு என்னை பிடிக்கவில்லை போலும். அதனால்தான் எனக்கு வாழ்த்து சொல்லவில்லை” என்று எண்ணுகிறீர்கள்.

அந்த அளவுக்கு நீங்கள் தன்னுணர்வுடன் பற்றாக்குறையுடன் இருக்கிறீர்கள். எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதில் குறியாக இருக்கிறீர்கள்.

எத்தனை கொடுமையான நோய் இது? இந்த நோய் உங்களுக்கு இல்லையென்றால்,

“நண்பர் வேலையில் தன்னையே இழந்திருக்கிறார். அதனால்தான் என்னை பார்க்கவில்லை” என்று நினைப்பீர்கள்.

அது உங்களை மகிழ்விக்கிறது.

“என்னை பார்க்கக் கூட இல்லை.” “அவர் என்னை வேண்டுமென்றே தவிர்க்கிறார்” என்பது இன்னொரு மனப்பாங்கு.

ஒரே விஷயம் இரு வேறு விதங்களாக பார்க்கப்படுகிறது.

ஒன்று உங்களை காயப்படுத்துகிறது. மற்றொன்று மகிழ்விக்கிறது.

மகிழ்வதன் பக்கம் இல்லாமல் ஏன் காயப்படுவதன் பக்கம் இருக்க வேண்டும்?

உங்கள் உலகை அசலான சொர்க்கமாக உங்களால் மாற்ற முடியும். இதுவே சொர்க்கம்; வேறெதுவும் அல்ல. உங்கள் உள்ளங்கையில் உள்ளது இந்த மகிழ்ச்சி நிறைந்த உலகு. ஆனால் நீங்கள் அதை வீசி எறிகிறீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.