புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுமா?

0
1

பெரம்பூர் ஐ.சி.எப், உத்திர பிரதேச ரெய்பரேலியில் மார்டன் கோச் தொழிற்சாலை, பஞ்சாப் மாநில கபூர்தாலாவில் ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் மேற்கு வங்காளத் ஹால்டியா என நான்கு இடங்களில் ரயில் பெட்டி தொழிற்சாலைகள் இந்தியாவில் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் 2018-19, 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளில் பயணிகள் ரயில்களுக்கான 19,169 பெட்டிகள் உற்பத்தி செய்வதற்கான அட்டவணையை ரயில்வே வாரியத்தின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் இயக்குநர் (உற்பத்தி பிரிவு) கோவிந்த் பாண்டே கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியிட்டார்.

இந்த அட்டவனைப்படி கடந்த 2018-19 நிதியாண்டு 6,058 பெட்டிகள் தயாரிக்க வேண்டும் 6,037 பெட்டிகள் தயாரித்து முடிக்கப்பட்டன. 2017-18 நிதியாண்டு 4,470  பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ரயில் பெட்டி தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன் 35 சதவீதம் கூடுதலாகி இருக்கிறது. இதனால் வரும் ஆண்டுகளில் புதிய ரயில்கள் அதிக எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தப்படுமா ? என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.

4

இது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன்துணைப் பொதுச் செயலாளர்மனோகரன் அறிக்கையில், ஆண்டுக்கு சுமார் 1300 காலாவதியான பெட்டிகளை மாற்ற புதுப்பெட்டிகள்தேவைப்படுகின்றன. மீதம் உள்ளவைகள் புதிய ரயில்கள் இயக்க பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்தி அட்டவணைப்படி, ஆண்டுக்கு 200 வீதம் 600 மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் ஹம்சாபர் ரயிலுக்கு தயாராகிறது. இதனைக் கொண்டு 30 ஹம்சாபர் ரயில்கள்  இயக்கலாம். 32 உலகத்தர ரயில்கள் இயக்க 640 பெட்டிகள் தயாரிக்கபடுகிறது. 20 அந்தியோதயா ரயில்கள் இயக்க 400 பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர 3396 மெயின் லைன் இ. எம்.யு பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதைக் கொண்டு 400 குறுகிய தூர பயணிகள் ரயில்கள் இயக்கலாம்.இந்த வகை ரயில்கள் சராசரியாக 8 பெட்டிகளுடன் இயக்ப்படுகின்றன.

2

4,135 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 642 மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் ,255 இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், 76 இதர வகை குளிர்சாதன பெட்டிகள் தயாரிக்கப்பட இருக்கின்றன. முன்பதிவு அல்லாத  தீனதயாளு பெட்டிகள் 1,663தயாரிக்கப்பட இருக்கிறது. ஏறக்குறைய 300 விரைவு ரயில்கள் இந்தப் பெட்டிகளைக் கொண்டு அறிமுகப்படுத்தலாம். இதுதவிர 46 பகல் நேர விரைவு  ரயில்களுக்கான 122 குளிர்சாதன மற்றும் 619 குளிர்சாதனம் அல்லாத இருக்கை வசதி பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. பெருமளவில் மின்சார ரயில் பெட்டிகள் தயாராகின்றன. ஒரு ரயில் அறுமுகப்படுத்த 10 முதல் 12 பெட்டிகள் போதும்.

இது தவிர இரட்டை அடுக்கு குளிர்சாதன உதய் ரயில் ஒன்றும், அதிநவீன தேஜா ரயில்கள் இரண்டு இயக்கவும் பெட்டிகள் தயாரிப்பில் உள்ளன. ரயில்-20 பெட்டிகள் உற்பத்தி இந்த அட்டவனையில் வராது. திட்டமிட்டப்படி ரயில்பெட்டிகள் உற்பத்தியும்நடைபெற்று வருகிறது.எனவே வரும் 2021 ம் ஆண்டுக்குள்ஏறத்தாழ 1000 புதிய ரயில்களை இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்த முடியும்.

3

Leave A Reply

Your email address will not be published.