திருச்சியில் கோடைபெக்ஸ் 2019 அஞ்சல் தலை கண்காட்சி

0
D1

கோடைபெக்ஸ் 2019 அஞ்சல் தலை கண்காட்சி
திருச்சிராப்பள்ளி தலைமை தபால் அலுவலக அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் கோடை பெக்ஸ் 2019 அஞ்சல்தலை கண்காட்சி துவங்கியது. இக்கண்காட்சி மே ஒன்றாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம்

மேலும் அஞ்சல்தலை சேகரிப்பு குறித்த பயிற்சி பட்டறையும் நடைபெறுகிறதும்
மே மாத பிரதி வாரம் புதன் கிழமைகளில் பயிற்சி பட்டறை நடைபெறும்.

மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் கண்காட்சியினை துவக்கி வைத்தார்

D2

முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், ரயில்வே அஞ்சல் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், அஞ்சல் துறை பணிகள் உதவி இயக்குனர்கள் சிவப்பிரகாசம், கலைச்செல்வன், சாந்தலிங்கம், மைக்கேல் ராஜ் , அஞ்சல் சேகரிப்பு நிலைய அலுவலர் ராஜேஷ், ரகுபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

N2

அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் அகிலேஷ், யோகா ஆசிரியர் விஜயகுமார், கீர்த்தனா, சித்ரா, ஷர்மா ,புவனேஷ், ஸ்ரேயா, கார்த்திகேயன், சதீஷ் விருதுநகர், கார்த்திகேயன், தாமோதரன் உட்பட பலர் காட்சிப்படுத்தியுள்ளார்கள்

கண்காட்சியில் விக்டோரியா ராணி, பேரோ தீவு, எனது இந்தியா, கல்வி நிறுவனங்கள், உலக நாடுகளின் அஞ்சல் தலை, இந்தியாவும் இயற்கை வளமும், பறவைகள் ,விலங்குகள்நூறாண்டு கண்ட இந்திய சினிமா, இந்தியாவின் பல்வேறு முகங்கள், அஞ்சல் துறையின் அஞ்சல் முத்திரைகள், திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழித்து கழிவறை அமைப்பது, பாரத ரத்னா விருது பெற்றவர்கள் ,ஆர்மி அஞ்சல் என பல்வேறு தலைப்பின் கீழ் அஞ்சல் தலை ,அஞ்சல் உறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

தோகாவில் நடைபெற்ற ஆசியா தடகள சேம்பியன் ஷிப் 800 மீட்டர் தடகள போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று கோமதி சாதனை புரிந்தார். தங்க மங்கை கோமதிக்கு அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் யோகாசிரியர் விஜயகுமார், ரகுபதி, லால்குடி விஜயகுமார் உள்ளிட்டோர் மை ஸ்டாம்ப்பில் தடகள வீராங்கனை கோமதிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அஞ்சல் தலையினை வழங்கினார்கள்.

கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.