கோடை வெயிலில் நாவிற்கு சுவையான மும்பை குல்பி

0
Business trichy

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று இளைப்பாற நாம் அனைவரும் குளிர்ச்சியானவற்றை தேடி செல்கிறோம். இதில் மும்பை குல்பியை சாப்பிட்டால் நாவிற்கு சுவையாகவும் மனதிற்கு உற்சாகமாகவும் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இத்தகைய சிறப்பு மிக்க மும்பை குல்பி திருச்சி பாலக்கரையில் கிடைக்கிறது.

கள்ளக்குறிச்சி சென்றிருந்த போது வீணா சங்கீதா என்பவர் தனது நண்பர்களுடன் இந்த குல்பி வகைகளை சுவைத்து பார்த்தார். இதே போல் திருச்சி மக்களை கவரும் விதமாக நாமும் குல்பி வகைகளை தர வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் திருச்சி பாலக்கரையில் உள்ள மும்பை குல்பி. இதற்கு இவரது கணவர் உறுதுணையாக இருந்து வருகிறார்.
சிறப்பம்சம்: கடைக்கு வர கூடிய வாடிக்கையாளர்களிடம் குல்பியின் சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதோடு மட்டுமில்லாமல் ஐஸ்கிரிமிற்கும் குல்பிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி கூறுகின்றனர். இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனுடைய சிறப்பம்சங்களை அறிந்து விரும்பி உண்கின்றனர்.

web designer


சுகர் ஃபிரி குல்பிகள்: இவ்வகை குல்பிகள் கல்லூரி மாணவர்களிடையே மட்டுமின்றி முதியவர்களிடமும் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றவாறு சுகர் ஃபிரி குல்பிகளும் கிடைக்கிறது மேலும் 70க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் உள்ளன.
வேலை வாய்ப்பு: இந்நிறுவனம் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பை உருவாக்கி தருகின்றது. திருச்சியில் பல இடங்களில் கிளைகளை உருவாக்கி இந்நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என்பதே இவர்களது இலட்சியமாகும்.

loan point


சிறப்பான டோர் டெலிவரி: வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப டோர் டெலிவரியும் செய்து தரப்படுகிறது. திருமணம் போன்ற அனைத்து விசேஷங்களுக்கும் மொத்த ஆர்டர்கள் எடுக்கப்பட்டு சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. மும்பை குல்பிகள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படுகின்றன. இந்த மும்பை குல்பி என்ற பெயரை கேட்டாலே எப்போது சாப்பிடுவோம் என்று மனதில் ஆவலாக உள்ளது. உடனடியாக திருச்சி பாலக்கரை பகுதிக்கு குல்பி கடைக்கு சென்று சுவைக்க வேண்டும் என்ற ஆவல் நம் மனதில் எழுகிறது. -Advt

IAS academy

Leave A Reply

Your email address will not be published.