10 ஆம்வகுப்பு தேர்வில் ஈஷா வித்யா மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி தூத்துக்குடி

0
gif 1

10 ஆம்வகுப்பு  தேர்வில் கோவை ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஈஷா அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக தமிழகத்தில்கோவை, ஈரோடு, தர்மபுரி, கரூர், சேலம்உள்ளிட்ட 8மாவட்டங்களில் ஈஷா வித்யா பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களில் 61சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முழு இலவசகல்வி பெறுகின்றனர்.

gif 4

2018-19-ம் கல்வி ஆண்டில் மொத்தம் 377 மாணவ, மாணவிகள்10 ஆம்வகுப்பு தேர்வு எழுதினர். அந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதன்படி, தேர்வு எழுதிய அனைவரும் சிறப்பான மதிப்பெண்களுடன்  100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஈஷா வித்யா பள்ளி மாணவ, மாணவிகள் சராசரியாக பெற்ற மதிப்பெண் 75 என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில்பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தில் இருந்து முதல் முறையாக 10 ஆம்வகுப்பு  தேர்வு எழுதியவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

gif 3

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் ஈஷா வித்யாபள்ளியில் இருந்து மொத்தம்  69 மாணவ, மாணவிகள் இந்தாண்டு 10 ஆம்வகுப்பு தேர்வு எழுதினர். அதில் மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண் 72% என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.