வறுமையை வென்ற தமிழச்சிக்கு விருது

0
Full Page

23-வது ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். `வறுமையை வென்ற தமிழச்சி’, சாதிக்க துடிப்பவர்களுக்கு வறுமை தடை அல்ல என இவரின் சாதனையை சமூக வலைதளங்களில் அவரைப் பலரும் புகழ்ந்துவருகிறார்கள். மேலும், அவருக்குத் தமிழகத்தில் பலரும் அன்பளிப்பு வழங்கிவருகிறார்கள்

திருச்சி வந்த கோமதி மாரிமுத்துவுக்கு அவரது உறவினர் மற்றும் கிராம பொதுமக்கள் அவரின் சொந்த ஊரான திருச்சி மணிகண்டம் அடுத்த மூடிக்கொண்டு கிராமத்துக்கு அழைத்துச் சென்று மிகப் பிரமாண்டமான விழா கொடுத்தனர். கோமதி மாரிமுத்துவின் வெற்றியைத் திருச்சி மாவட்ட மக்களே, தங்கள் வீட்டுப் பிள்ளையின் வெற்றியாகவே கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று இந்திரா கணேசன் கல்வி குழுமம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி எலைட் சார்பாக கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் நேற்று கோமதி மாரிமுத்துவுக்கு ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Half page

இந்நிகழ்வில் இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் செயலர் ராஜசேகரன் இயக்குனர் முனைவர் வி பாலகிருஷ்ணன், கல்வி குழுமத்தின் முதல்வர்கள் மற்றும் மாணவ மாணவ மாணவியர் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி எலைட் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சிக்கு வருகை தரவிருந்த கோமதியை வரவேற்க திருச்சியில் அனைத்து ஏற்பாடுகளையும் (கிரம மக்களை அழைத்துவருவதற்கு பேருந்து உள்ளீட்ட) செய்தது இந்திரா கணேசன் கல்வி குழுமம் தான்.

மேலும், இந்திரா கணேசன் கல்வி குழுமத்தை சுற்றியுள்ள கிரமபுற மாணவர்களை விளையாட்டு வீரர்களாக உருவாக்க இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் விளையாட்டு திடலை பயன்படுத்தி கொள்ள அனைத்துவகைய ஏற்பாடுகளையும் செய்துதருவோம் என குழுமத்தின் செயலர் ராஜசேகரன் கூறினார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.