திருச்சி விமானநிலையத்திற்க்கு வருகை தந்த இங்கிலாந்து தீயணைப்பு வாகனம்

0

திருச்சி விமான நிலையத்திற்கு இங்கிலாந்து நாட்டிலிருந்து புதிய தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வாகனம் ரூபாய் 4.10 கோடியில் வரவழைக்கப்பட்டுள்ளது இந்த வாகனமானது 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரினை பயன்படுத்துவதற்கும் இதன் பயன்படுத்தும் வேகமானது அதிக அளவில் இருக்கும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்   மேலும் இந்த வாகனத்தின் மூலம் தீப்பற்றும் பகுதிகளில் தீ பரவாமல் மிக விரைவான முறையில் அணைப்பதற்கான உபகரணங்கள் இதில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

food

இந்த வாகனமானது விமான நிலையத்தில் ஏற்படும் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கும்  தீ பரவுவதை தடுக்கும் முறையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த வாகனமானது  நேற்று காலை மும்பையிலிருந்து திருச்சிக்கு தனி லாரி மூலம் கொண்டுவரப்பட்டது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.