திருச்சி அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த பனிஸ்மென்ட்…….

0
Business trichy

திருச்சி அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த பனிஸ்மென்ட்………

காரணம் தெரியாமல் புலம்பும், சுற்றுலாத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை..,,

MDMK

திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள முடிகண்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோமதி (30). தடகள வீராங்கனை. வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருகிறார் கோமதி. கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடந்த 23வது ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு பல நடிகர்களும் சினிமாத்துறையினரும் வாழ்த்துக்களும், ஊக்கத்தொகையும் தெரிவித்திருந்த நிலையில்

Kavi furniture

அரசியல் கட்சிகளின் சார்பில் வாழ்த்துக்கள் குவிந்தது திமுக சார்பில் 10 லட்சம் ஊக்க தொகையை மு.க. ஸ்டாலின் வழங்கினார். தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அரசு சார்பில் அவருக்கு உதவி செய்ய முடியவில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக கட்சி சார்பிலும் எந்த உதவித் தொகையும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று திடீரென்று 15 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டு கோமதி அவசரமாக சென்னைக்கு அழைக்கப்பட்டார். சென்னை வந்த அவருக்கு அதிமுகவின் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் 15 லட்சத்துக்கான காசோலையை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருச்சியின் 2 அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜனுக்கும், அமைச்சர் வளர்மதிக்கும் அழைப்பு இல்லை. இதில் வேதனை என்னவென்றால் கோமதி வசிக்கும் முடிகண்டம் இருப்பது ஸ்ரீரங்கம் தொகுதியில் அந்த மரியாதைக்கு கூட என்னை அழைக்கலையேனு கட்சிக்காரர்களிடம் புலம்புகிறார் அமைச்சர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.