திருச்சியில் பிரமாண்டமான நாடக போட்டி

0
D1

சமூக மாற்றத்தின் வித்து நாடகம்

நாடகம் மனித குலத்தின் வாழ்க்கையோடு இணைந்த கலைவடிவம். நாடகம் எகிப்தில் தோன்றியது. என்று ஆய்வாளாகள் கருதுகிறார்கள். DRAMONIAN
என்ற கிரேக்க சொல்லின் பொருள் “ஒன்றை செய்” அல்லது “ஒன்றைப் போல நடித்துக்காட்டு” என்பதாகும். நாட்டின் அகத்தை சுட்டிக் காட்டும் பண்பால் நாடு+அகம் = நாடகம் என்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். கி.மு. 3000 ஆண்டுக்கு முன்பே எகிப்தில் நாடகம் தோன்றிவிட்;டது என குறிப்புகள் கூறுகின்றன.
18-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாடகம் உருவானது என்கிறது வரலாறு. இந்நாடகங்கள் புராண வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டு நடிக்கப்பெற்றது.
பின் பள்ளு, குறவஞ்சி, நொண்டி மற்றும் கீர்த்தனை நாடகங்களில் வளார்ச்சி பெற்ற பிரதியாகத் தெருக்கூத்து அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற பலர் நாடகத்தின் மூலம் மக்களிடையே ஓர் எழுச்சியை உருவாக்கி இருக்கிறார்கள்.
சுதந்திர போராட்ட காலத்தில் தேசியவாதி நாடகம் என்றாலே பிரிட்டிசார் பயந்து, பொது இடங்களில் நாடகங்கள் அரங்கேற்றக்கூடாது என்ற தடை சட்டம் போடும் அளவிற்கு நாடகங்கள் சக்தி வாய்ந்த ஊடகமாக இருந்திருக்கிறது.

D2

பின்னர் வந்த திராவிட இயக்கம் சமூக நீதிக்கான குரலை நாடகத்தில் எழுப்பி, சாதி, மத, மூடக்கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு மூச்சு திணற வைத்து ஒரு பெரும் அரசியல் மாற்றத்திற்கே அழைத்து சென்றது என்பது வேறு எங்கும் நிகழ்ந்திராத ஒரு வரலாறு.

நாடகமே திரைத்துறைக்கு மூலதனம்.

திரைப்படம் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவ ஆரம்பித்த உடனே, முழு நேர நாடகக் குழுக்களும், நாடகக்காரர்களும் சினிமா துறைகளில் நுழைந்து பிரபலமானார்கள். ( P.U.சின்னப்பா, T.K. தியாகராஜ பாகவதர் ராமசாமி, பானுமதி, M.G.R, சிவாஜி, M.R ராதா அவர்கள் வழியில் பாரதிராஜா, இளையராஜா மற்றும் பலர்)

திரைப்படங்களின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு, பாரம்பரிய பின்பற்றுதலையும், பண்புடைய தமிழ்ச்சூழலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல உரிய நவீன நாடக ஆசிரியர்கள் இங்கே தோன்றவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

பின்னர் நாடகங்கள் துணுக்குத் தோரணங்களாக உயர்நடுத்தர வார்க்கத்திடம் சிக்கி கதை கந்தலாகிப்போனது மற்றொரு கதை.

N2

இன்றைய தலைமுறையினர் காட்டும் வேகமும், துடிப்பும் நிச்சயம் நாடகத்தை முன்னிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

நாடகம் அவர்கள் நம்பிக்கைகஅவர்களை் பனைகளை, இலட்சியத்தை நிறைவேற்றும். நாடகம் யதார்த்தத்தின் முன் அவர்களை வீறு கொள்ள வைக்கும். அவர்களின் எதிர்கால கனவான சமூக மாற்றத்தைத் தனது வடிவங்களில் உட்புகுத்தி ஓர் ஒப்பற்ற களத்தை முன்னெடுத்து உருவாக்குகின்ற போது அவர்களை ஆரத்தழுவி, உச்சி முகர்கிறது நாடகம்.
வீறு கொள்ளும் இளைஞர் பட்டாளம் பேர் வாங்கி விதியை மாற்ற விடுக்கும் இந்த அழைப்பு, அவர்களை
சமூக மாற்றத்திற்கான வித்தாக உருவாக்கும்
என்பது இரும்பின் வலிமையுடைய உறுதி.

நடிகன்டா
மேடை நாடகப்போட்டி

கால அளவு 5 நிமிடங்கள்

தலைப்பு
ஊடகங்கள் வழி சமூக மாற்றம்

முதல் சுற்று
நாள்   : 07.05.2019
நேரம்  : காலை 9 மணி
இடம்  : நல்லாயன் நிலையம். மேலப்புதூர், திருச்சி

இறுதி சுற்று
நாள்   : 11.05.2019
நேரம்  : மாலை 6 மணி
,இடம்  : புனித மரியன்னைப்.                பேராலய .வளாகம், திருச்சி

Event organized by
Fr. Sagayaraj,
fr. Lawrence,
fr. P.Arockia panneer selvam
In media Anand

பங்கேற்க தொடர்புக்கு
fr. Lawrence
98427 99713
fr. P. Arockia panneer
98658 81542
In Media Anand
94431 65266

N3

Leave A Reply

Your email address will not be published.