உயிர் வளர்ப்போம்…20

0
1

நாடி பரிசோதனையில் சிறந்து விளங்க விரும்பும் ஒரு நபர் தன்னை அதற்காக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னுடைய ஆட்காட்டி விரல் நுனியை பல்வேறு பொருட்களில் மேலோட்டமாகவும், அழுத்தமாகவும் பதித்து, தனது தொடு உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். சூடான பொருட்கள், வெதுவெதுப்பான பொருட்கள், குளிர்ந்த பொருட்கள் என பொருட்களின் தன்மையை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். மேலும் பொருட்களின் கடினத் தன்மையையும், தனது ஆட்காட்டி விரல் நுனியை கொண்டு அளவிடுதல் வேண்டும். மிருதுவான பொருட்கள், சற்று கடினமான பொருட்கள், மிகக் கடினமான பொருட்கள் என வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். உதாரணமாக பஞ்சு, மரம், கல், உலோகம் என பல்வேறு பொருட்களை, ஆள்காட்டி விரல் நுனியால், வேறுபட்ட வெப்ப சூழலில், தொட்டு உணர வேண்டும். மேலும் நீரினை இயல்பான நிலையிலும், குளிர்ந்த நிலையிலும், உறைந்த நிலையிலும், வெப்பமான நிலையிலும், கொதி நிலையிலும் தொட்டு உணர்தல் வேண்டும். இவ்வாறு பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, விரல் நுனி ஆனது ஒருவருடைய நாடியின் தன்மையை, துல்லியமாக உணரக்கூடிய திறனை பெறும்.

நோயறிதலில் இரண்டாவதாக வருவது பார்த்து அறிதல். ஒரு பஞ்சபூதத்தின் வெளிப்புற உணர்வு உறுப்பு மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள இதர உறுப்புகள் ஆகியவற்றை நன்றாக பார்த்து அவற்றின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். வெளிப்புற உணர்வு உறுப்பின் நிறம், குணம், பதம் போன்றவற்றை தங்களின் பார்வையால் கூர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உறுப்புகள் வெளிப்படுத்தும் தன்மையைப் பொறுத்து, அந்த உடலில் உள்ள பஞ்சபூதத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக கண் என்ற வெளிப்புற உணர்வு உறுப்பு ஆகாய பூதத்துடன் தொடர்பு கொண்டது. ஒருவருக்கு கண்கள் சிவந்து இருக்கிறது எனில் அவருடைய ஆகாய பூதத்தில் நெருப்பின் உடைய தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அறியலாம், ஏனெனில் சிவப்பு என்பது நெருப்பு பூதத்தின் நிறமாகும். அதே கண்களில் மஞ்சள் நிறம் தென்பட்டால் ஆகாய பூதம் பூமி பூதத்தின் தாக்கத்தால் பாதிப்பில் உள்ளது என அறியலாம். அதே கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தால், ஆகாய பூதம் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், கண்கள் காய்ந்து இருந்தால், காற்று பூதத்தின் தாக்கத்தால் பாதிப்பில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இதனை இன்னும் தெளிவு படுத்திக் கொள்ள நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு அட்டவணையை உருவாக்குதல் வேண்டும் அந்த அட்டவணையில் பஞ்சபூதங்களின் அடிப்படையில் பல்வேறு விஷயங்களை வகைப்படுத்துதல் வேண்டும்

 

2

4

மேற்காணும் இவ்வட்டவணை எல்லைகள் அற்றது. எந்த ஒரு தத்துவத்தின் மீதும் பொருந்தக்கூடியது. தாங்கள் காணக்கூடிய, கேட்கக்கூடிய, உணரக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் இவ்வட்டவணைக்குள் பொருத்திவிட இயலும். இதன் துணை கொண்டு ஒருவருடைய உடலில் தோன்றுகின்ற குறியீடுகளைக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள பூதத்தையும், பாதிப்பின் தன்மையையும் நன்கு அறிவால் ஆராய்ந்து உணர்ந்து கொள்ளலாம். மேலே கண்டுள்ள அட்டவணையின் அடிப்படையில் ஒரு சில உதாரணங்களை காணலாம். ஒருவருக்கு வாயில் கசப்பு தன்மை தோன்றுகிறது எனில், அவருடைய உடலில் நெருப்பு பூதம் மிகைப் பெற்றுள்ளது .அவ்வாறாக ஒருவருடைய மனதில் அதீதமான கவலை குடிகொண்டுள்ளது எனில் அவருடைய உடலில் மண் பூதம் பாதிப்பில் உள்ளது. இவ்வாறாக தாங்கள் ஒவ்வொருவரும் தத்தம் அறிவினைக் கொண்டு ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். இதுவே பார்த்து அறிதல்.

நோயறிதலில் இறுதியாக வருவது கேட்டறிதல்: கேட்டறிதல் என்பது பாதிப்பில் உள்ள அவருடைய உடலின் நிலையை, மனதின் நிலையை, தெளிவாக கேட்டு அறிந்து கொண்டு, மேற்காணும் அட்டவணையின் அடிப்படையில், அவரிடம் ஒரு சில கேள்விகளை கேட்டு, பஞ்ச பூதத்தின் பாதிப்பை ஊர்ஜிதம் செய்து கொள்ளுதல் ஆகும். உதாரணமாக ஒருவருக்கு நீர் பூதம் பாதிப்பில் இருப்பதை சந்தேகிப்பீர் எனில் அவருடைய காதில் ஏதேனும் பாதிப்பு தோன்றுகிறதா, பயம் ஏற்படுகிறதா என பஞ்சபூதங்களின் அடிப்படையில் கேள்விகளைக் கேட்டு அந்த பூதத்தின் பாதிப்பை ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்