திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்க 17வது ஆண்டு விழா மற்றும் சர்வதேச பெண்கள் தின விழா.

0

திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்க 17வது ஆண்டு விழா மற்றும் சர்வதேச பெண்கள் தின விழா திருச்சியில் நடைபெற்றது. சங்க செயலர்
ஜெயந்திராணி வரவேற்றார். தலைவர் ராஜேஸ்வரி தலைமையுரையாற்றினார். கவிஞர் சல்மா மற்றும் அகில இந்திய வானொலி திருச்சி நிகழ்ச்சி தலைமை நடராஜன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள் . துணைத் தலைவர் செல்லம் தமிழரசன், பொருளாளர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

food

மூத்த வழக்கறிஞர் சங்கர் முரளி, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க செயலர் ராஜசேகர், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலர் வெங்கட் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நீதிமன்றத்தில் பணி புரியும் அலுவல் பணியாளர்களுக்கு பணியை பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது. சர்வதேச பெண்கள் தின விழாவை முன்னிட்டு பெண் வழக்கறிஞர்களுக்கு கேரம், செஸ், ரங்கோலி, மெஹந்தி, அந்தாக்சரி, கவிதை, பேச்சு, நடனம், வாய்ப்பாட்டு, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கோகோ, ஓட்டப் பந்தயம் ,நீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வழக்கறிஞர்களின் குழந்தைகளுக்கு ஓட்டப் பந்தயம், நீர் நிரப்புதல், லெமன் அண்ட் ஸ்பூன் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவாக துணைச் செயலர் நீலாவதி நன்றி கூறினார் . செயற்குழு உறுப்பினர்கள் கீதாலட்சுமி விஜயா சத்யபாமா கீதா அன்னலட்சுமி ராஜேந்திரன் ரஞ்சனி செந்தில் வடிவு விஜயலட்சுமி ஸ்ரீவித்யா சுவாதி உட்பட பல்வேறு வழக்கறிஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்

gif 4

Leave A Reply

Your email address will not be published.