திருச்சியில் நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம்

0
1

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்று 29.04.2019 முதல் 04.05.2019 வரை நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நேரடியாக அந்தந்த கிராமங்களுக்கு சென்று பரிசோதனை செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மரபணு (டி,என்,ஏ) பெருக்க சோதனை (CBNAAT) பற்றிய IEC திட்டத்தின் கீழ் காசநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் பரிசோதனை செய்ய நடமாடும் CBNAAT சோதனை கூட வாகனம் DL1LAA1583திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில் 29.04.2019 முதல் 04.05.2019ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

2
4

நடமாடும் பரிசோதனை வாகனம் 29.4.2019 அன்று மாநகராட்சி எம்.ஜி.ஆர்.நகர், வண்ணாரபேட்டை,  தாராநல்லூர், இ.பி.ரோடு, ஜெயில்பேட்டை, கூனிபஜார், பொன்மலைபட்டி, ஆகிய பகுதிகளிலும், 30.4.2019 மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், பன்னாங்கொம்பு, பொய்கைபட்டி, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்குளம், வைரம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், பழைய பாளையம், சேவல்பட்டி, ஆகிய பகுதிகளுக்கும், 1.5.2019 அன்று திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், வேங்கூர் கூத்தைப்பார், அல்அமீன் நகர், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கள்ளுக்குடி இனாம்புலியூர், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் எட்டரை, ஆகிய பகுதிகளுக்கும், 2.5.2019 அன்று மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சேலைமுல்லைநகர், காந்திநகர், துறையூர் ஊராட்சி ஒன்றியம், மருவத்தூர், சேவைக்காரன்பட்டி, உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை. சோபனபுரம், ஆகிய பகுதிகளுக்கும், 3.5.2019 முசிறி  ஊராட்சி ஒன்றியம், ஆனைப்பட்டி, வடுகப்பட்டி, தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், குளக்குடி, மனமேடு, ஆகிய பகுதிகளுக்கும், 4.5.2019 இலால்குடி மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், மாந்துரை, சிறுகையூர், கோவண்டக்குறிச்சி, ஆகிய பகுதிகளுக்கும் நடமாடும் CBNAAT சோதனை கூட வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை நடைபெறவுள்ளது

இவ்வாகனத்தில் அந்த பகுதி முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஒருவர் மற்றும் முதல் நிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் ஒருவரும் உடன் செல்வார்கள். எனவே பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.