மோசடி வலைக்குள் சிக்கி தவிக்கும் திருச்சி மக்கள்.

0
gif 1

மோசடி வலைக்குள் சிக்கி தவிக்கும் திருச்சி மக்கள்.

திருச்சியில் தொடரும் மோசடி, தொண்டு நிறுவன பெயரில் மக்களை குறிவைக்கும் கும்பல்.
சீட்டு கட்டி மோசடி செய்யும் கும்பல் திசைக்கொன்று நாளுக்கு நாள் திருச்சியில் முளைத்துக் கொண்டே தான் தான் செல்கின்றது. அந்த வகையில் திருச்சி மக்களிடம் பணத்தை மொத்தமாக சுரண்டிய நிறுவனமான திரிபுரா, பிஏசிஎல் , மற்றும் சமீபத்தில் புதிய தெய்வீக அன்பின் தொண்டு நிறுவனம் என்ற பல சீட்டு நிறுவனங்கள் குறிப்பாக திருச்சி மக்களை குறி வைத்து ஏமாற்றியது காவல்துறைக்கு தெரிந்ததே. அந்தவகையில்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தேசிய மக்கள் பேரியக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் சமீபத்தில் எங்களை ஓரு மோசடி கும்பல் ஏமாற்றி விட்டது என்று திருச்சி பதிரிக்கையாளர்கள் கூட்டத்தில் கூறினார். இதுத்தொடர்பாக செல்வராஜியிடம் விசாரித்தபோது

gif 3
gif 4

கடந்த 3 ஆண்டுகளாக இந்த சேவை அமைப்பை நடத்தி வருகிறேன். எனது அமைப்பின் செயல்பாடுகளை சமூக வலை தளங்களில் பார்த்து விட்டு திருச்சி கே.கே.நகர் குறிஞ்சி நகரை சேர்ந்த அனுபூதி சமாஜம் நிறுவனரான சாமியார் நந்திஷா என்ற நந்தகுமார் என்னை தொடர்பு கொண்டார். எனது செயல்பாடுகளை குறித்து பாராட்டினார். பின்னர் பேச்சுவார்த்தையில் பலக்கம் நிலவி பின்னர் அவர் ஒரு நாள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கினால் பல இடங்களில் இருந்து நன்கொடை பெறலாம் என்று அவர் கூறினார்.

இதை நம்பி தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் தலைமை தூதுவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ‘‘மிஸ்டர் ஐ பவுண்டேஷன்’’ என்ற பெயரில் இந்த நியமனங்கள் நடந்தது. மேலும் இந்த பவுண்டேஷன் மூலம் ஒரு தொகுதிக்கு 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் மூலம் மக்களுக்கு சேவை செய்யப்படும். இதற்காக 100 இளைஞர்கள், தலைமை தூதுவர்கள் ஆகியோரிடம் தலா ரூ. 1 லட்சம் பெற்றுக் கொண்டார். என்னிடமும் ரூ. 5 லட்சம் பெற்றுக் கொண்டார். அதோடு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 27 சுயேட்சைகளின் செலவுத் தொகையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

ஆனால், இறுதியில் அனைவரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை எரித்து, அதன் வீடியோவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினால் மட்டுமே நன்கொடைகள் மூலம் எங்களுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்தோம். நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டோம். ஆனால், அவர் பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார். அதோடு அடியாட்களைக்கொண்டு எங்களுக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தோம். புகாரை பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் 32 மாவட்டத்திலும் நந்திஷா மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே வேலூர் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் ஏலச் சீட்டு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. நாட்டிற்கு எதிராக செயல்படும் நந்திஷா மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, அவரது பின்பலம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இனி யாரும் அவரது பேச்சை நம்பி ஏமாறக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.