அரசியல், வணிக சூழ்ச்சி நிறைந்தது தான் சினிமா ! “மெஹந்தி சர்க்கஸ்” திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் ராஜேந்திரன்

0
Full Page

“ப்யூர் சினிமா”தமிழ் ஸ்டுடியோவின் சார்பாக சென்னை வடபழனியில் அதன் அலுவலகத்தில் நேற்று “மெஹந்தி சர்க்கஸ்” திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் ராஜேந்திரன் பங்கேற்று சினிமா ஆர்வலர்களிடம் கலந்துரையாடினார்.

முதலில் அவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கூறியதாவது…”மெஹந்தி சர்க்கஸ்”திரைப்படத்தின் ப்பிரி ப்ரொடக்ஷன் வேலைகளை நான் ஒரு படத்தில் வேலை செய்துகொண்டே ஆரம்பித்து முடித்தேன்.பிறகு என் தம்பி ராஜு முருகனும் நானும் சேர்ந்து இந்தக் கதையை இன்னும் மெருகேற்றினோம். இப்படியாக”மெஹந்தி சர்க்கஸ்” திரைப்பட கதை முழு வடிவில் உருவானது.பின்னர் ஒரே ஒரு தயாரிப்பாளரை மட்டுமே அணுகினோம்.கதை ஓகே ஆனது பட்ஜெட்டில் படத்தை முடித்தோம்.என்றார் பின்னர் சினிமா ஆர்வலர்கள் சிலர் அவரிடம் கேள்விகளைக் கேட்டார்கள்…

கேள்வி:நான் ஒரே ஒரு முறை மட்டுமே”மெஹந்தி சர்க்கஸ்” திரைப்படத்தை பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. மீண்டும் மறு முறை பார்க்க நினைத்தேன் முடியவில்லை. காரணம் ஒரு திரையரங்கில் கூட ஓடவில்லை காரணம் என்ன?

 

பதில்:ஆம்!உண்மை முதல் நாளில் கூட்டம் இல்லை. பின்னர் நல்ல விமர்சனம் வந்தவுடன் படம் சூடுபிடித்தது. நல்ல வசூல் பின்னர் மூன்றே நாட்களில் ஒரு திரையரங்கு விடாமல் படம் தூக்க ப்படுகிறது.அது தான் அரசியல்,சூழ்ச்சி,வணிக சூழ்ச்சி,எல்லாம் நான் இன்னும் வெளிப்படையாக எதுவும் பேசமுடியாது புரிந்து கொள்ளுங்கள்…

 

கேள்வி:எத்தனை நாட்கள் ஆனது திரைப்படத்தை முடிக்க?

 

பதில்:சுமார் ஒன்றரை வருடம் ஆனது.ஆனால் 52 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டோம்…

கேள்வி:”மெஹந்தி சர்க்கஸ்” திரைப்படத்திற்க்கு வந்த விமர்சனங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

 

பதில்:நேர்மறை,எதிர்மறை, இரண்டும் என ஒரு கலவையான விமர்சனங்கள் வந்தன.சிலர் படத்தின் கரு தெரியாமல் விமர்சனம் என்கின்ற பெயரில் விமர்சிக்கின்றார்கள். விமர்சனம் செய்பவர்கள் பாதி நபர்களுக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாது.

Half page

எதிர்மறையாக பேசி பப்ளிசிட்டியை தேடிக்கொள்வார்கள்.என்பது போன்ற கேள்விகளுக்கு மிக பொறுமையாக பதில் கூறினார்.கூட்டத்தில் வந்த ஒரு சிலர் படத்தைப்பற்றி எதிர்மறை கருத்தை கூற…அதற்கும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார்.

 

மேலும் “நம்ம திருச்சி”சார்பாகவும் சில கேள்விகளை இயக்குனரிடம் கேட்டோம்…

 

நம்ம திருச்சி:இன்றைய சூழலில் டிஜிட்டல் பிளாட்பார்ம் வரமா?சாபமா?

 

இயக்குனர்:வரமே!…ஆனால் அது இன்னும் பல குக் கிராமங்களில் போக வேண்டும்.அப்படி சென்றால் வருங்காலங்களில் திரையரங்குகள் தேவையில்லை.படங்களை டிஜிட்டல் பிளாட்பார்மில் ரிலீஸ் செய்யலாம்.

 

நம்ம திருச்சி:”மெஹந்தி சர்க்கஸ்”திரைப்படத்தில் எது மிக முக்கியம் என்று பார்க்கின்றீர்கள்?இது இல்லை என்றால் படம் இல்லை என்று எதை நினைக்கின்றீர்கள்?

 

இயக்குனர்:வசனங்கள் இல்லை என்றால் என் படம் இல்லை.கிளைமாக்ஸ் காட்சியில் வரும் வசனம் மிக முக்கியமானவை.

நம்ம திருச்சி:ஒருவர் உதவி இயக்குனராக பணியாற்றினால்  மட்டும் தான் படம இயக்க  முடியுமா?

 

இயக்குனர்:இல்லை…இது முற்றிலும் தவறு. மணிரத்தினம் முதல் பல நபர்கள் உதவி இயக்குநராக பணியாற்றாமலும் படங்களை இயக்கியுள்ளார்கள்.நாம் பயணித்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், புத்தகங்களில் படித்த விஷயங்கள்,கற்பனை விஷயங்கள்,இவைகள் இருந்தால் போதும் படத்தை இயக்கலாம் என்று நம்ம திருச்சிக்கு பேட்டி கொடுத்தார்.

நல்ல விமர்சனம் உள்ள படம் மக்கள் ரசித்து பார்த்துக் கொண்டுள்ள படம் ஏன் திடீரென்று”மெஹந்தி சர்க்கஸ்”திரைப்படத்தை திரையரங்கை விட்டு அகற்ற வேண்டும்?”மெஹந்தி சர்க்கஸ்” போன்ற படங்களுக்கு அண்டை மாநிலங்களில் மானியம் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் மானியம் இல்லை.அது தமிழக படைப்பாளிகளுக்கு தேவையும் இல்லை. ஆனால் நல்ல திரையரங்குகள் வேண்டும்.

அரசியல் காரணமாக ஓடாமல் தோல்வியை சந்திக்கின்றன நல்ல திரைப்படங்கள்.இதனை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சினிமா துறையில் நிகழும் அரசியலை நீக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்பதே படைப்பாளிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளாகும்.

இது எப்போது சாத்தியப்படுமோ? ஆனால்”மெஹந்தி சர்க்கஸ்” போன்ற திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடங்களை பிடித்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை….

Quarter page

Leave A Reply

Your email address will not be published.