திருச்சி மாவட்டத்தில்  கோடைக்கால பயிற்சிமுகாம்  ஆட்சியர் தகவல்

0
1

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள  16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சிமுகாம் வருகின்ற 01.05.2019 முதல் 21.5.2019 முடிய 21 நாட்களுக்கு திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கத்தில்  காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, கையுந்துப்பந்து, டென்னிஸ், இறகுப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை மற்றும் டேக்வோண்டா ஆகிய விளையாட்டுகளுக்கு  சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

கல்வி மாவட்ட அளவில் உலக திறனாய்வு கண்டறியும் திட்டம் 2017-2018ஆம் ஆண்டுக்கான தடகள போட்டிகள் மூன்று கல்வி மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.  அப்போட்டியில்  6 விளையாட்டுப் பிரிவுகளில் ( 100 மீ, 200 மீ, 400 மீ,  நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல்)  முதல் 10 இடங்களை பிடித்த  மாணவ மாணவிகளுக்கு 5 நாட்கள் இருப்பிடமில்லா சிறப்பு பயிற்சி முகாம்  29.04.2019 முதல் 03.05.2019 வரை தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை கீழ்கண்ட பள்ளி மைதானங்களில் நடத்தப்படவுள்ளது

2
கல்வி மாவட்டத்தின் பெயர்

 

திருச்சி

 

 

இலால்குடி

 

 

முசிறி

பயிற்சி முகாம் நடைபெறும் இடம்

 

அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி

 

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலால்குடி

 

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி

 

4

ஓவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 5 நாட்கள் நடைபெறும் இருப்பிடமில்லா பயிற்சி முகாமில் சிறப்பாக செய்யும் 60 மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு 15 நாட்களுக்கு  04.05.2019 முதல் 18.05.2019 வரை அண்ணா விளையாட்டரங்கில் 180 மாணவ மாணவிகளுக்கு இருப்பிடபயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

எனவே மேற்கண்ட பயிற்சி முகாமில்  மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில்  கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தினமும் காலை மாலை ஊட்டச்சத்து வழங்கப்படும்.  பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுபவர்கள்  அனைவருக்கும்  சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி, (தொலைபேசி எண் 0431-2420685) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என   திருச்சிராப்பள்ளி   மாவட்ட    ஆட்சித்தலைவர்   சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.