இயற்கை வேளாண்மை

0
Business trichy

இயற்கை வேளாண்மை என்பதை மிக சரியாகக் கூற வேண்டுமானால், கற்காலத்தில் நாம் வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம். கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் தான் மனித இனம் பயிர்களை வளர்க்கத் துவங்கியதும், பல வகையான கலாச்சாரக் கண்டு பிடிப்புகளும் நடந்தது .

நம் முன்னோர்கள் எந்த இரசாயனத்தை பயன்படுத்தி வேளாண்மை செய்தனர் ?….

என்ற கேள்விக்கு நாம் இயற்கை வேளாண்மையை கூறலாம்..

UKR

இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள் ஆகியவற்றை பயன்படுத்தாமல்   வேளாண்மை செய்யும் முறையே இயற்கை வேளாண்மை ஆகும். எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தி அல்லது முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை முறைமையாகும்.

இயற்கை வேளாண்மையில்  விளைந்த பொருட்கள் சுகாதாரமாகவும்,மனித உடலுக்கு எந்தவித தீங்கு விளைவிக்காத வகையிலும் நமக்கு கிடைக்கிறது.

செயற்கை வேளாண்மை என்று கூறி நம் மண்ணை நஞ்சாகி வருகிறோம்….

அதுமட்டும் இல்லாமல் இன்று நாம் அனைவரும் செய்து வரும் செயற்கை வேளாண்மையால் .நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல நோய்கள்  வருகின்றன .சர்க்கரை நோய் , மலட்டுத்தன்மை ,இன்னும் என்னவெல்லாம் சொல்கிறார்கள்…!

உழவர்களின் நண்பனான மண்புழு இயற்கை வேளாண்மைக்கு பெரிதும் உதவுகிறது .

BG Naidu

மண்புழு உரம் (vermicompost)  திடக்கழிவு மேலாண்மையில் கிடைக்கும் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உட்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து  ஆகிய அத்தனையும் இருக்கிறது.45 முதல் 60 நாளில் மண்புழு உரம் உற்பத்தியாகிவிடும்.

உலகத்தில் மண்புழுக்களில்   3000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. இதில் 6 வகையான மண் புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவை. பெரும்பாலும் உரம் தயாரிக்க சிவப்பு ஊர்ந்தி எனப்படும்(எயசெனியா பெடிடா (Eisenia foetida), எயசெனியா ஆண்ட்ரி (Eisenia andrei) மற்றும் லும்ப்ரிகஸ் லுபெல்லஸ் (Lumbricus rubellus) ) மண்புழு இனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

நம் முன்னோர்கள் இயற்கை வேளாண்மையை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் வாழ்த்தனர்.ஆனால் இன்று நாம் செயற்கை வேளாண்மையை பின்பற்றி அணு அணுவாக அழிந்து வருகிறோம்.

 

எனவே இயற்கை வேளாண்மை செய்வோம் …..!

 

சுற்றுசூழலை காப்போம்….!

S.manikanadan,

Vilangudi,

Kumbakonam.

 

BG Naidu 1

Leave A Reply

Your email address will not be published.