மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி ஊர்வலம்

இலங்கை தேவாலயங்களிலும்,உணவுவிடுதி உள்ளிட்ட பல்வேறுஇடங்களிலும் உயிர்ப்பு பெருவிழாஅன்று நடத்தப்பட்ட வெடிகுண்டுபடுகொலையைக் கண்டு இதயம்அதிர்ச்சியில் நொறுங்கிபோயுள்ளது. உறவுகளை இழந்தசொந்தங்களுக்கு ஆறுதலையும்காயமுற்ற அன்பர்களுக்கு நம்ஜெபங்களையும் அளிக்கவேண்டியுள்ளது. எனவே நம்ஆதரவினையும் உடனிருப்பையும்தெரிவிக்கும் விதமாக புதன்கிழமை(24.04.19) மாலை மௌன அஞ்சலிஊர்வலம் நடத்தப்பட உள்ளது.

மெழுகுதிரிகளை கையிலேந்திசெயிண்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன்பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், பாரதிதாசன் சாலை, தலைமைதபால் நிலையம், ஜோசப் கண் மருத்துவமனை, மேலப்புதூர் வழியாக புனித மரியன்னைபேராலயத்தில் நிறைவுற்றது. அங்குஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறியஜெப வழிபாடும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டு ஒன்று கூடி நம் சொந்தங்களுக்காகஜெபித்து மலர்துவி அஞ்சலி செலுத்தினர்.மேலும் ஜெப நிகழ்வை தமிழ்சுவிசேஷ லுத்திரன் திருச்சபையின் தலைமை போதகர் சுந்தரம் இயேசுராஜ் ஜெபம் சொல்லி ஆரம்பித்தார், இந்த மெழுகுதிரி ஏந்திமௌன அஞ்சலி ஊர்வலத்தின் நோக்கத்தினை கத்தோலிக்க திருச்சபையின் திருச்சிமறைமாவட்ட தொடர்பாளர் அருட் தந்தை யுஜின் எடுத்துரைத்தார். பகவத்கீதையிலிருந்து வசனத்தை வாசித்து பிராத்தனை செய்தார் ஆசிரியர் நந்தகோபால், மேலும் இஸ்லாமியர்கள் சார்பாக திருக்குறானின் வார்த்தைகளை கூறி ஜமாத்துல்லா சபையின் திருச்சி மண்டல பொறுப்பாளர் மௌலவி முகமது மிரான் அலிம் பிராத்தனை செய்தார், திருவிவிலியத்திலிருந்து வசனத்தை வாசித்தார் ஆசிரியர் வேளாங்கன்னி இறுதியாக தென்னிந்திய திருச்சபையின் திருச்சி – தஞ்சை மண்டல பேராயர் அறிவர். சந்திரசேகரன் அவர்கள் இறுதி பிராத்தனை செய்தார், இந்நிகழ்வை நொறிப்படுத்திய தந்தை மைக்கேல் ஜோ நன்றி கூறி நிறைவு செய்தார். இந்த வழிபாட்டின் போது புனித மரியன்னை பேராலய மற்றும் அருங்கொடை இல்ல சகோதர சகோதரிகளால் பாடல்கள் பாடப்பட்டது.


