தேசிய சாம்பியன்ஷிப் வீரர்களை உருவாக்கும் ஸ்ரீசிங்கர் பேட்மிட்டன் அகடாமி

நாம் அனைவரும் நமது குழந்தைகள் படிப்பில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் அவர்கள் சாதிப்பார்கள் உயர்ந்த நிலையை அடைவார்கள் என்று நினைக்கிறோம். அது மட்டுமே வெற்றி அல்ல
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் என்பார்கள். ஆளும் வளரணும் என்பது உடல் வளர்ச்சியை குறிக்கும். உடற்பயிற்சியையும் குறிக்கும். விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் பலர் உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள். அத்தகைய நிலையை நமது குழந்தைகளும் பெறுவதற்கு சிறந்த பயிற்சி அளிக்கும் ஓர் உன்னத நிறுவனம்தான் நமது ஸ்ரீசிங்கர் பேட்மிட்டன் அகடாமி.
ஸ்ரீசிங்கர் பேட்மிட்டன் அகடாமி…
இனி நாம் ஸ்ரீ சிங்கர் பேட்மிட்டன் அகடாமியின் வளர்ச்சி பற்றி காண்போம். இதன் நிறுவனர்கள் மதிமாறன், வெங்கடேசன் மற்றும் சேதுராமன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்தனர். நாம் பிறந்த மண்ணிலும் விளையாட்டு வீரர்களை உருவாக்கி சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இவர்களது மனதில் தோன்றியதன் விளைவுதான் ஸ்ரீசிங்கர் பேட்மிட்டன் அகடாமி, ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோவில் அருகில் அருள் முருகன் கார்டனில் அமைந்துள்ளது. இங்கு பேட்மிட்டன் கோர்ட் மைதானம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

பல மாணவ மாணவிகள் பேட்மிட்டன் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான சிறப்பான பயிற்சி சிறந்த வல்லுனர்களை கொண்டு அளித்து வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது. தற்போது ஒரு மாணவர் மாநில அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார் என்பது அவர்களது பயிற்சிக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகும். மாணவர்கள் மாநில, தேசிய, அகில இந்திய அளவில் சாம்பியன்ஷிப் பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் வீல்சேர் பேரா பேட்மிட்டன் போட்டிக்கு இவர்களது மாணவர் கார்த்தி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திறமைசாலிகளை உருவாக்கும் நிறுவனம்…

ஒரு மாணவனின் திறமை அவரது பெற்றோர்களுக்கு தெரியாது இந்நிறுவனம் மாணவனின் தகுதி மற்றும் திறனை கண்டறிந்து நிறை குறைகளுக்கு தக்கவாறு தேர்ந்தெடுத்து அதற்கு தகுந்த பயிற்சியை சிறந்த முறையில் தருவது இந்த அகாடமியின் சிறப்பு மிக்க அம்சங்களில் ஒன்று.
மைதானத்தின் சிறப்பு…
அகில இந்திய அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்தோடு சிறந்த முறையில் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல. மேலும் பல தகுதி போட்டிகள் இம்மைதானத்தில் நடந்து வருகிறது. இத்தகுதி போட்டியானது திறமைமிக்க மாணவ மாணவிகளை உருவாக்க உதவுகிறது. தற்போது கோடை விடுமுறையில் மாணவ மாணவிகள் தங்களது நேரத்தை பயனுள்ளதாக்கி கொள்ள எதிர்காலத்தில் பேட்மிட்டனில் தங்களது கனவுகளை நிறைவேற்றி கொள்ள இந்நிறுவனத்திற்கு வந்து பயிற்சி எடுத்து கொள்ளுங்கள்.
பயிற்சி நேரம்…
காலை 5 மணி முதல் 7 மணி வரையும் மீண்டும் மாலை 5 மணி முதல் 9 மணி வரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்
என்ன மாணவ மாணவிகளே கிளம்பிட்டீங்களா? ஸ்ரீசிங்கர் பேட்மிட்டன் கோர்ட்டிற்கு… -Advt
