ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைவு, மலட்டுதன்மைக்கு மூலிகை சிகிச்சை

0
1

சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. ஆணான சிவம் என்ற விந்துவும் பெண்ணான சக்தி என்ற கருமுட்டையும் இணைவதால்தான் இப்பிரபஞ்சத்தில் உயிர்களின் உற்பத்தி காலங்காலமாக தொடர்ந்து உலக இயக்கம் நடைபெறுகிறது. ஆண்மையிலும், பெண்மையிலும் ஏற்ற தாழ்வுகள் நிகழும் போது மனித வாழ்க்கையில் உடல் அளவிலும் உள்ளத்தளவிலும் பல்வேறு சிக்கல்கள் உண்டாகின்றன. இல்லறம் நல்லறமாக விளங்க இருபாலரின் ஜனனேந்திரியங்கள் ஆரோக்கியமாக திகழ வேண்டும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாவிட்டால் பின்நாளில் அதுவே சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்துவிடும். அதன் விளைவு ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கலாம். அதே போல் சிறுவயதில் ஏற்படும் இன்பகிளர்ச்சியை கட்டுப்படுத்தாவிட்டால் அதைத் தணிக்க சுய இன்பத்தில் ஈடுபட்டு விந்தை அபரிதமாக செலவழித்து ஆண்மையை இழந்தவர்களுக்கும் மலட்டுத்தன்மைக்கும் வழி கோலும்.

விந்து கெட்டிப்பட, ஆண்மை பெருக,
விந்து ஊற சித்த மருத்துவம்…

2

ஆணின் ஜனனேந்திரிய அமைப்பு மற்றும் அதில் உண்டாகும் நோய்கள் பற்றி இதுவரை பார்த்தோம். இனி ஜனனேந்திரியக் கோளாறுகள் நீங்கி நலம் பெற சில எளிமையான மூலிகை சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்வோம்.
ஓரிதழ் தாமரை என்பது கிழவனையும் குமரனாக்கும் மூலிகை என்பர். இதன் இலையை அரைத்து நெல்லிக்காயளவு 100 மிலி. காய்ச்சின பசும் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர இந்திரியம் கெட்டிப்படும். ஆண்மை பெருகும். ஆரோக்கியமான விந்து ஊறும். எதிர்பாராமல் விதைப்பகுதியில் அடிபட்டு விந்தணுக்களின் சுரப்பில் தடை ஏற்படலாம். அப்படியே விந்தணுக்கள் உற்பத்தி சரியாக இருந்தாலும் அவைகள் விரைந்தோடும் தன்மை சரியான அடர்த்தி, பிசுபிசுப்புத்தன்மையில் குறைபாடு ஆரோக்கியமில்லாத விந்தணுக்கள், குறைந்த எண்ணிக்கையில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் இத்தகைய குறைபாடுகளால் கருத்தரிக்க செய்ய முடியாமல் போகலாம்.

அது மட்டுமல்ல 80 % விந்தணுக்கள் ஆரோக்கியமானதாக இருந்தாலும் விந்து நாளங்கள் தடித்து, அதனால் ஏற்படும் அடைப்பு காரணமாக விந்து வெளிவர முடியாமை அல்லது இறந்து போன விந்தணுக்கள் வெளியேறுதல் இவைகளாலும் கருத்தரிக்க செய்ய முடியாமல் போகலாம். இத்தகைய குறைபாடுகள் இளமையில் காசநோய், பொண்ணுக்கு வீங்கி, யானைக்கால் நோய், தொழு நோய் போன்றவைகளால் ஏற்படலாம். இவைகள் நாளடைவில் மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.
விந்து முந்துதல், மூத்திரத்தில் விந்து கலந்து வருதல் உள்ளுறுப்பு ரணத்திற்கு சித்த மருத்துவம்
நூறு கிராம் சிற்றாமணக்கு எண்ணையில் ஐம்பது கிராம் சுத்தமான கழுவிய (7 முறை) கற்றாழைச்சாறு ஐம்பது கிராம், பூண்டை அரைத்துப் போட்டு காய்ச்சவும், நீர் சுண்டியதும் இறக்கி வடிகட்டி காலை, மாலை வேளைக்கு 1 தேக்கரண்டி சாப்பிட்டு காரம், புளிப்பு குறைத்து உணவு உண்டு வர விந்து முந்துதல், மூத்திரத்தில் விந்து கலந்து விடுதல் ஜனனேந்திரியத்தில் உள்ளும், புறமும் ஏற்பட்ட புண் மற்றும் சுழற்சிகள் நீங்கி நலம் பெறலாம்.

இந்திரிய ஒழுங்கு மற்றும் புரஸ்தக்கோள
சுழற்சிக்கு சித்த மருத்துவம்…

தண்ணீர் விட்டான் கிழங்கு 20 கிராம், புளியங்கொட்டைத் தோல் 20 கிராம், கேரட் விதை 20 கிராம், இவைகளை பொடியாக்கி 60 கிராம் சர்க்கரை கலந்து காலை, மாலை 1 டீஸ்பூன் சாப்பிட்டு பால் சாப்பிட்டு வர இந்திரிய ஒழுங்கு புரஸ்தக்கோள சுழற்சி மறையும்.
விந்துவில் உள்ள குறைபாட்டிற்கு சித்த மருத்துவம்
செவ்வாழை பழத்தை தேனில் ஊறவைத்து தினமும் இரவு உண்டு வந்தாலும், அத்தி விதை, ஆலம் விதை, அரசம் விதை இவைகளை சமமாக எடுத்து தூளாக்கி 1 டீஸ்பூன் காலை, இரவு பாலில் கலந்து குடித்து வந்தாலும், ஆண் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். அதே சமயம் விந்தில் உள்ள மற்ற குறைபாடுகளையும் நீக்கும்.

4


விந்தணுக்கள் பெருக, ஆண் மலடு நீங்க
திருப்தியான உடலுறவுக்கு சித்த மருத்துவம்…

ஜாதிக்காய், ஜாதி பத்திரி ஒவ்வொன்றும் 2 கிராம், ஏலக்காய், லவங்கப்பட்டை, சுக்கு, லவங்கப்பூ இவைகள் ஒவ்வொன்றும் 4 கிராம், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, அக்ரோட் பருப்பு இவைகள் ஒவ்வொன்றிலும் 30 கிராம், உலர்ந்த முருங்கைப்பூ 100 கிராம், கருவேலம் பிசின் 100 கிராம் இவைகளை இடித்து பொடியாக்கி இத்துடன் 1/4 கிலோ கொட்டை நீக்கிய பேரிச்சம்பழம் கலந்து நன்றாக இடிக்கலாம். தேனை கலந்து சிறிது சிறிதாக விட்டு இடிக்கலாம்.
லேகிய பதம் வந்ததும் எடுத்துக் கொண்டு சுண்டைக்காயளவு காலை, இரவு சாப்பிட்டு, சூடான பால் சாப்பிட, விந்தணு கூடும். விந்து ஊறும். மலடு, ஆணுறுப்பு தளர்ச்சி நீங்கும். விந்தணுக்களின் குறைபாடு நீங்கும். இளமையும், கவர்ச்சியும் கூடும். உடலுறவில் முழு திருப்தி கிடைக்கும். பொதுவாக ஆண் ஜனனேந்திரியக் குறைவுகள் அனைத்தும் நீங்கும்.
ஆண்களுக்கு ஏற்படும்

கீழ் ஒழுக்கு நீங்க சித்த மருத்துவம்…

மிளகு 5 கிராம் எடுத்து சிறிது எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டு மை போல் அரைத்து நான்கு தேக்கரண்டி சுத்தமான எள் எண்ணெயில் கலந்து உட்கொள்ளவும். அத்திப்பிஞ்சு, இருபதை எடுத்து முன்னூறு மி.லிட்டர் தேங்காய் பால் விட்டு அரைத்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளை 3 நாட்கள் சாப்பிடவும்.

ஆண்களுக்கு ஏற்படும் இரத்த ஒழுக்கு நீங்க சித்த மருத்துவம்
ஆவாரை வேரின் பட்டை 10 கிராம், விஷ்ணுகரந்தி செடி 10 கிராம், அருகு 5 கிராம் எடுத்துக்கொண்டு மூன்றையும் மைபோல் அரைத்துக் கொண்டு பசும்பாலில் கலக்கி காலை, மாலை இருவேளை உண்டு வர குணமாகும்.வல்லரை இலை 25 கிராம், முருங்கைப்பூ 3 கிராம் அரைத்து பசும்பாலில் கலக்கி 5 நாட்கள் காலை ஒரு வேளை மட்டும் உண்டு வர இரத்த ஒழுக்கு நீங்கும்.

தாது நஷ்டம் நீங்க சித்த மருத்துவம்…

உலர்ந்த செண்பக மொக்கை இடித்து தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி வைத்துக் கொண்டு பால், வெல்லம் கலந்து உண்டு வர தாது நஷ்டம் நீங்கும்.
-Advt

3

Leave A Reply

Your email address will not be published.