திருச்சியின் தங்க மங்கை கோமதி மாரிமுத்து.

0
Full Page

இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து பெருமை சேர்த்திருக்கிறார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து.

கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து களமிறங்கினார்.

துடிப்புடன் ஓடி முதலிடம் பிடித்த கோமதி, இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்று தந்தார். உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

30 வயதாகும் கோமதி, 2 நிமிடம் 02.70 நொடிகளில் 800 மீட்டர் தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். அவரது மிகச்சிறந்த ஓட்டம் இதுதான்.

Half page

பந்தயத்தை ஓட ஆரம்பித்தபோது கோமதி மூன்றாவது இடத்தில்தான் இருந்தார். கடைசி 150 மீட்டரில் ஆக்ரோஷமாக ஓடி, சீன வீராங்கனையைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். ‘‘அந்த நொடிகள் மிகக் கடினமாக இருந்தன. பந்தயக் கோட்டை நான் முதலில் தொட்டேன் என்பதை உணரவே முடியவில்லை. ஏதோ கனவு போல இருந்தது’’ என்கிறார் கோமதி.

திருச்சியைச் சேர்ந்தவர் கோமதி. ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தால் 20 வயது முதலே பயிற்சி எடுத்து வருகிறார்.

தற்போது பெங்களூருவில் வருமானவரித் துறையில் பணிபுரிந்தபடி பயிற்சி எடுத்துவரும் கோமதி, ஏற்கனவே இரண்டு முறை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லாமல் ஏமாற்றம் அடைந்தார். எல்லாவற்றுக்கும் சேர்த்து இப்போது சாதித்திருக்கிறார்.

இந்த வீரத் தமிழ்ப் பெண்ணை வாழ்த்துவோம்!

Quarter page

Leave A Reply

Your email address will not be published.